1. உடல் செயல்பாடுகள் : வாயு மண்டலம்
2. இராசி நிலை : கடகராசி மண்டலம்
3. காய்கறி : புடலங்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் சி
5. தத்துவம் : நீர்
6. தோஷம் : வாதம்
7. துருவம் : பெண்
8. பருவம் : காற்று காலம்
9. நேரம் : மாலை 4 முதல் 6 வரை
10. குணம் : தியாகம்
11. வைபவம் : வரலட்சுமி விரதம்
12. ஞானம் : அஷ்ட சக்திகள்
எண்ணம் போல் வாழ்வு, இது பழமொழி. எண்ணம் போல் உடல் அமைப்பு, இது புதுமொழி. அதாவது, ஒரு தாயின் கருவறையில் நுழைந்திடும் உயிர் ஆத்மாவானது தனக்கு வேண்டிய உடல் என்னும் வீட்டை, தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் தானே கட்டுகிறது. வாழ்நாள் முழுக்க தேவையான ஆரோக்கியத்தை, ஆத்மா தானே கருவரையில் வடிவமைக்கின்றது. குற்றம், குறையுடன் வடிவமைக்கப்படுமாயின் அது வாழ்வினில் பிரதிபலிக்கும். பினி, மூப்பு, சாக்காடு இம்மூன்றையும் நிர்ணயிக்கும் கருவறையில் தான் இறைவன் கருணை காட்டவேண்டும். பல இரகசியங்கள், அதிசயங்கள், அற்புதங்கள் நிறைந்த இக்கருவறையை அடிப்படையாகக் கொண்டு தான் பாரதத்தில் கோவில்கள் கட்டப்படுகின்றன. ஆகவே எண்ணங்கள் என்ற விதையின்றி உடல் என்னும் விருட்சம் உருவாகாது.
ஒவ்வொரு எண்ணமும் வாயு மண்டலத்திற்கு கட்டளை இடுகிறது. வாயுமண்டலம் இரத்தத்தையும், நிணநீரையும் ஓடச்செய்கிறது. இதுவே, உடல் என்னும் இயந்திரம் இயங்குவதற்கான சூட்சமம். உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொண்டால் நோய்களை கட்டுப்படுத்தலாம். ஆனால் எண்ணங்களின் சுடரான குணங்களை மாற்றினால் தான் நோய்களை நீக்க முடியும். அதனால் தான் நம் நாட்டில் கேட்கப்படுகிறது, குணமாகிட்டீங்களா? 12 விதமான குணங்களை 12 விதமான காய்கறிகள் மூலம் பெற முடியும் என்பது தான் காய்கறி வைத்திய முறையின் அடிப்படை கருத்து. இக்கருத்தை விட்டு விட்டு செய்யப்படும் ஆராய்ச்சியும், மருத்துவமும் யாருக்கும், எதற்கும், என்றும் பயன்படாது.
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா? அப்படி மறக்க தெரிந்தவர்களுக்கு, ஆழ்ந்த, சஞ்சலமில்லாத, நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அப்படி மறக்கத் தெரியாதவர்கள், புடலங்காயை தோல், விதையுடன் அரைத்து சாராக பருகவேண்டும். எண்ணங்கள் கட்டுப்படாத போது வாயுமண்டலமும் கட்டுப்படாது செயல்படும். அச்சமயத்தில், காதுகளில் ஒலி, நாக்கினில் வெடிப்பு, மூக்கில் கோணையாக எலும்பு வளர்ச்சி, சிறுநாக்கு வளர்ச்சி, படுப்பதால் ஏற்படும் இருமல், ஆசனவாய் வெடிப்பு, கடும் காரநெடியுடன் சிறுநீர், தோல் வெடிப்பு பாதவெடிப்பு என நூற்றிற்கும் மேற்பட்ட உபாதைகள் ஏற்பட வாயுமண்டலம் காரணமாகின்றது.
உடலில் ஒவ்வொரு திசு உற்பத்திக்கும், வளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியமானது. ஆனால் அந்த புரதச்சத்தை செரிமானம் செய்வதற்கு உடல் உழைப்பு தேவை. சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், கடும் உழைப்பாளிகளுக்கு புரதம் ஏற்ற உணவாகும். அப்படி உழைக்காதவர்கள் புரதம் உட்கொண்டால் கடுமையான அஜீரணத்திற்கு ஆளாகி அதிக வாயுக்கழிவுகள் உண்டாகும். வாயுக்கழிவுகளை முறையாக வெளியேற்ற முடியாவிட்டால் எண்ணிலடங்கா நோய்கள் உண்டாகும். சுறுக்கமாக, எல்லா நோய்களும் இங்கிருந்தே தோன்றுகிறது. அதாவது, உழைப்பிற்கேற்ற உணவு அல்லது உணவிற் கேற்ற உழைப்பு. இதனையே டயட் என்று அழைக்கப்படுகிறது.
பச்சையான முளைகட்டிய தானியங்கள், பருப்புகள், கடலை வகைகள் என்றும் தீங்கு விளைவிக்காது. அதனை சமைப்பதால் புரதம் விஷமாக மாறுகின்றது. இந்த விஷத்தை வெளியேற்ற சிறுநீரகம் பெரும்பாடுபடுகிறது. பல நாட்கள் போராடிய பின் இறுதியாக போராட முடியாது, தற்கொலை செய்து கொள்கின்றது. அதாவது செயல் இழந்து விடுகிறது. முக்கியமாக அசைவ உணவின் காரணமாக ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் சிறுநீரக நோயாளிகள் படைக்கப்படுகிறார்கள். மருத்துவ உலகின் வளர்ச்சிக்காக அவர்கள் தங்களை அர்பணித்துக் கொள்கிறார்கள். வாழ்க அசைவ சித்தாந்தம்! வளர்க மருத்துவத் தொழில்!
வரலட்சுமி விரதம்
பொதுவாக ஒரு வரம் வேண்டி விரதம் இருப்பது ஒரு விதியாகும். ஆனால் வரத்தை பெறுவதற்கு பதிலாக வரத்தை அருளுபவர்களாக மாற்றக்கூடிய வழி விதிமுறை தான் வரலட்சுமி விரதமாகும். இந்த விரதத்தினால் ஆத்மாதான் இழந்த ஆற்றலை மீண்டும் பெறுகிறது. மற்றவர்களையும் பெற வைக்கின்றது. நாம் நம்முடைய எட்டு விதமான ஆற்றலை அதாவது அஷ்டசக்திகளை பயன்படுத்தும் கலையை மறந்துவிட்டோம். மறதியினால் நஷ்டம் உண்டாகிறது. முக்கியமாக சத்தியத்தை மறப்பது பாவமாகும். சத்தியத்தை நினைவில் கொள்வது புண்ணியமாகும், அவ்வளவே. ஞாபகம் மற்றும் மறதி, இதனையே இறந்த பின் நாம் கொண்டு செல்கின்றோம். மறந்து போன எட்டு விதமான சக்திகளை பற்றி இப்போது காண்போம்.
1. கட்டுப்படுத்தும் சக்தியின் மூலம் ஐம்புலன்களைக் கடந்த சுகத்தை அனுபவித்தல்
2. தயாராகும் சக்தியின் மூலம் ஒரு இடத்தில் மறைந்து மறு இடத்தில் தோன்றுதல்
3. வளைந்து கொடுக்கும் சக்தியின் மூலம் யாருடைய எண்ணத்தையும் பெறமுடிதல்
4. சகிப்புத் தன்மை சக்தியின் மூலம் யாருடனும் நம் எண்ணத்தை பகிரமுடிதல்
5. பகுத்தறியும் சக்தியின் மூலம் உலகில் எந்த ஒரு நிகழ்வினையும் காணமுடிதல்
6. தீர்மானிக்கும் சக்தியின் மூலம் சுவாசத்திலிருந்து விடுதலை பெறுதல்
7. எதிர்கொள்ளும் சக்தியின் மூலம் பிறப்பு இறப்பினை தூய்மையாக்குதல்
8. ஒத்துழைக்கும் சக்தியின் மூலம் பஞ்ச பூதங்களை கட்டுப்படுத்துதல்
இவ்வாறாக எட்டு சக்திகளை அட்டமாசித்திகள் அல்லது அஷ்டலட்சுமிகள் என்றும் அழைப்பதுண்டு. ஆத்ம சக்திகளை பரமாத்மாவிடம் பெறுவதே ஆஸ்தியாகும் அல்லது ஆத்திகமாகும். இதனை பெறவேண்டி செய்யப்படும் முயற்சியே தவமாகும், வைராக்கியமாகும் அல்லது விரதமாகும்.
விரதம் என்பது உடல் மற்றும் உடல் சம்மந்தப்பட்ட பதார்த்தங்களை அதாவது உலகில் யாருடைய பெயரை மற்றும் உருவத்தை மனதில் சுவீகாரம் செய்யாத நிலையாகும். இதுவே மனிதனின் அதிகபட்ச சாதனையாகும். பிரம்ம பிரயத்தனமாகும். இதனை வெற்றிகரமாக செய்பவர்கள் பரமாத்மாவிற்கு நிகராக சர்வ சக்திவானாக முடியும். மனிதன் அஷ்டசக்திகளை கொண்டு வாழும் போது அவனை தேவன் என்றும் அதனை இழந்து வாழும் போது அதே மனிதனை அசுரன் என்றும் அழைக்கின்றோம். தத்துவக் குப்பையின் அடிமைதனத்திலிருந்து விடுபட இராஜயோக தியானம் பயிற்சியின் மூலம் சுய இராஜ்ய அதிகாரியாகுவோம்.