பீர்க்கங்காய் 
கார்த்திகை மாதம்
1. உடல் செயல்பாடுகள் : 
          நிணநீர் மண்டலம்
2. இராசி நிலை : 
          விருச்சிகராசி மண்டலம்
3. காய்கறி : பீர்க்கங்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் பி5
5. தத்துவம் : நீர்
6. தோஷம் : பித்தம்
7. துருவம் : பெண்
8. பருவம் : குளிர் காலம்
9. நேரம் : இரவு 12 முதல் 2 வரை
10. குணம் : உள் முகம்
11. வைபவம் : கார்த்திகை தீபம்
12. ஞானம் : 
          ஆன்மாவின் 
          ஏழுவகை பிறவிகள்

அகம், புறம் இரண்டையும் பகுத்துப் பார்ப்பது அறிவு. அகம், ஆன்மா விசித்திரமானது. புறம், பஞ்சதத்துவம் சித்திரமானது. விசித்திரமான ஆன்மா சித்திரமான உடலில் மறைமுகமாக அதாவது குப்தமாக நடிப்பதால் சித்திரகுப்தன் என்று ஆன்மா பெயர் பெற்றது. ஆன்மா துன்பத்தை கொடுத்தும், பெற்றும் வாழ்ந்தால் மரணத்தில் பயம் உண்டாகும். அதாவது யமதர்மனின் சட்டம் பாயும். ஆன்மா துன்பம் கொடுக்காது, பெறாது வாழ்ந்தால் மரணத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அதாவது அமரபதவி கிடைக்கும். இப்படி சிந்திப்பது தான் மெய் பொருள் காண்பதறிவு.

இயற்கைக்கு கட்டுப்பட்டு வாழ்வது அறிவு. அதாவது அறிவியல். இயற்கையை கட்டுப்படுத்தி வாழ்வது ஞானம். அதாவது மெய்ஞானம். மனிதர்களுக்கு அறிவு உண்டு. தேவர்களுக்கு ஞானம் உண்டு.

அறிவு என்பது உடலுக்கும் உண்டு. பழைய உயிரணுக்களை சிதைத்து அதிலிருந்து புதிய உயிரணுவை உருவாக்கிட அறிவு தேவை. உணவிலிருந்து தேவையான ஊட்டச்சத்தை பிரித்து சேமித்து பின் உபயோகிக்க அறிவு தேவை. கிருமிகளை கண்டறிந்து அதனை அழித்து வெளியேற்றிட அறிவு தேவை. உடலுக்குள் படைத்தல், காத்தல், அழித்தல் இம்மூன்றும் நிகழ்த்திட அறிவு தேவை. அறிவாற்றல் கொண்ட உடலுக்கு அதற்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்தாலே போதுமானது. அது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும். மருந்து, மாத்திரைகளை கொண்டு அதனை வழி நடத்த முடியாது. முயற்சி செய்தால் நிச்சயம் வியாபாரம் பெருகும். ஆனால் இறுதிவரை ஆரோக்கியமாக வாழந்திட முடியாது.

உடலுக்கு கொடுக்கப்பட்ட அறிவிற்கு நோய் எதிர்ப்புசக்தி மண்டலம் அல்லது நிணநீர் மண்டலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இம்மண்டலம் அறிவின் உச்சத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். உடலில் கிருமிகளை அழிப்பதற்கு அதாவது சுட்டெறிப்பதற்கு வெப்பம் தேவை. எந்த வெப்பத்தில் கிருமிகளை அழிக்கமுடியும் என்று நிர்ணயிக்கப்படுகிறதோ அத்தனை வெப்பத்திற்கு உடல் உஷ்ணமானது உயர்த்தப்படும். இதன் பெயர் காய்ச்சல். கிருமிகளை கொன்று குவித்த பின் வெப்பம் தானாக அடங்கிவிடும். கிருமிகளை கொல்வதற்கு தேவையான விட்டமின் பி5 நிறைந்த உணவை உட்கொண்டு அதன் பணியை சுலபமாக்கவேண்டும். இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற கசப்பான உணவு தேவை. வெந்தயம், பீர்க்கங்காய், வேப்பிலை, வேப்பெண்ணெய், பாகற்காய், விளக்கெண்ணெய் போன்ற பொருட்களே போதுமானது. ஆனால், அதன் தரத்தை மட்டும் உறுதி செய்திடவேண்டும். நம்முடைய நோக்கம் கிருமிகளை அழிப்பதில் இருக்க வேண்டுமே தவிர வெப்பத்தை குறைப்பதில் இருக்கக்கூடாது. கிருமிகள் அழிந்து விட்டன என்பதற்கு சான்று என்னவென்றால் காய்ச்சலுக்கு பின் உடல் சோர்வு மற்றும் உடல்வலி இருக்கக்கூடாது. அப்படி இருக்கிறது என்றால் நாம் பார்த்த வைத்தியம் தவறானது என்று பொருள்.

அப்படி வெளியேறாத கிருமிகள் தேக்கமுற்று நாளடைவில் பெருகி தன்னை உடலை விட்டு நீக்கமுடியாத அளவு நிலை நிறுத்திக்கொள்ளும். தனக்கு அடைக்கலம் கொடுத்த விசுவாசத்திற்காக அதனை சர்க்கரை நோயாகவும், கேன்சராகவும், கிட்னி செயழிலப்பாகவும் கிருமிகள் தனது நன்றிக்கடனை திருப்பி செலுத்திவிடும்.

இஞ்சி, மிளகு, திப்பிலி, கிராம்பு, வெந்தயம், ஏலக்காய், மஞ்சள், கடுகு, பட்டை, சீரகம், ஓமம், சோம்பு என நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட பல பொருட்களை சேர்த்து சமைத்தாலும், சாப்பிட்டாலும் நமக்கு ஏன் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, வாந்தி, பேதி ஆகியவை வருகிறது என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் பாரதத்தின் காரவகைகள். மெக்சிகோவிலிருந்து கொண்டு வரப்பட்ட மிளகாயில் சிறிதளவு சயனைடு என்னும் விஷம் உண்டு. இதனை உண்டால் நிச்சயம் நோய் எதிர்ப்புத்திறன் பலவீனப்படும். கிருமிகள் அதிகரிக்கும். எந்த நோயும் யாருக்கும் குணமாகாது. முக்கியமாக உடலில் எந்த புண்களையும் ஆறவிடாது. பச்சைமிளகாய், வரமிளகாய், மிளகாய்தூள், கொடமிளகாய் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு. எச்சரிக்கை !

கார்த்திகை தீபம்

உள் மனதுடன் அதாவது மனசாட்சியுடன் செயல்பட சில சமயம் நாம் தவறும் போது அதன் தாக்கமானது மனம் பக்குவமடையாது கரடுமுரடாக மாறிவிடுகிறது. ஒரு விஷயத்தில் எந்த அளவு உண்மை மற்றும் பொய் உள்ளது என்பதனை கண்டறிதல், பல சரியான விஷயங்களை வரிசைபடுத்தி செயல்படுத்துதல், பல தவறான விஷயங்களில் வரிசைபடுத்தி நீக்குதல், பலவித கருத்துக்களை ஒன்றிணைத்தல், ஒரே கருத்தினை பல கோணங்களில் பார்த்தல், சாத்தியக் கூறுகளை பிரித்து உற்று நோக்குதல், சாத்தியமல்லாதவற்றின் வீரியத்தை அளவிடுதல், குற்றங்களின் காரணங்களை அலசி ஆராய்தல், யதார்த்தத்தின் அடிப்படையில் எந்த ஒரு கருத்தினையும் உள்வாங்குதல், கடந்த காலம் மற்றும் எதிர்காலம் இரண்டையும் கருத்தில் கொண்டு நிகழ்காலத்திற்கான திட்டத்தை வகுத்தல், ஆகியவையே மனப்பக்குவமாகும். இதனை அடைய வேண்டி நிகழ்த்தப்படும் வைபவமே கார்த்திகை தீபத்திருநாள். மனமது செம்மையானால் மந்திரமது தேவையில்லை. செம்மையாகுவது என்றால் பக்குவமாகுவது. சாதனையாளர்கள் வெற்றி, தோல்வியை என்றுமே வேறுவேறாக நினைப்பதில்லை. சாதனையாளர்களுக்கு முயற்சியும், பயிற்சியும் வெற்றியாகும், அலட்சியமும், சோம்பேறித்தனமும் தோல்வியாகும். இதுவே கர்ம தத்துவத்தின் இரகசியமாகும். பிரஜா பிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயமானது கர்மதத்துவத்தை பாடமாக கற்றுத்தருகின்றது. நேர்மையான முயற்சி மற்றும் அதனால் கிடைக்கும் பலனை அனைவர் பொருட்டும் பகிர்ந்தளித்தல் ஆகிய இவ்விரண்டையும் கொண்டுதான் பிறப்பு, இறப்பு மற்றும் வாழ்வின் தரமானது நிர்ணயிக்கப்படுகிறது. பிறப்பு, இறப்பு என்னும் பயணத்தின் காரணமாக ஆத்மாவில் உள்ள குணங்கள், கலைகள் ஏழுவிதமான மாற்றங்களை அடைகின்றது. மாறுபாட்டினை வர்ணங்களாக உதாரணம் காட்டி புரிய வைக்கப்படுகிறது.

1. தேவ வர்ணம் : 
          16 கலைகளை கொண்ட ஆத்மா

2. சத்ரிய வர்ணம் : 
          14 கலைகளை கொண்ட ஆத்மா

3. வைசிய வர்ணம் : 
          8 கலைகளை கொண்ட ஆத்மா

4. சூத்திர வர்ணம் : 
          அனைத்து கலைகளை இழந்த ஆத்மா

5. பிராமண வர்ணம் : 
          கலைகளை பெறுவதற்காக யோக பயிற்சி செய்யும் ஆத்மா

6. பரிஸ்தா வர்ணம் : 
          பெற்ற கலைகளை பிரயோகம் செய்யும் ஆத்மா
 
7. அனாதி நிலை : 
          செய்வதிலிருந்து விடுபட்டு செய்விக்கும் நிலையில் ஆத்மா

இதனையே ஏழுவகையான பிறவிகள் என்று பொதுப்படையாக கூறப்படுகிறது.?
பீர்க்கங்காயின் நன்மைகள், பயன்கள், பலன்கள், மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி பாடலாக காணொளியில் கேட்டு, கண்டு மகிழுங்கள்
பீர்க்கங்காய் 
கார்த்திகை மாதம்
1. உடல் செயல்பாடுகள் :
          நிணநீர் மண்டலம்
2. இராசி நிலை :
          விருச்சிகராசி மண்டலம்
3. காய்கறி : பீர்க்கங்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் பி5
5. தத்துவம் : நீர்
6. தோஷம் : பித்தம்
7. துருவம் : பெண்
8. பருவம் : குளிர் காலம்
9. நேரம் : இரவு 12 முதல் 2 வரை
10. குணம் : உள் முகம்
11. வைபவம் : கார்த்திகை தீபம்
12. ஞானம் :
          ஆன்மாவின்
          ஏழுவகை பிறவிகள்

Contact Us
Mail Us
vegetableclinic@gmail.com