அரசாணிக்காய்
ஆவணி மாதம்
1. உடல் செயல்பாடுகள் : 
          தசை மண்டலம்
2. இராசி நிலை : சிம்மராசி மண்டலம்
3. காய்கறி : அரசாணிக்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் பி7
5. தத்துவம் : நெருப்பு
6. தோஷம் : பித்தம்
7. துருவம் : ஆண்
8. பருவம் : மழை காலம்
9. நேரம் : மாலை 6 முதல் இரவு 8 வரை
10. குணம் : அன்பு
11. வைபவம் : 
          விநாயகர் சதுர்த்தி, 
          கோகுலாஷ்டமி
12. ஞானம் : 
          உலகின் முதல் 
          இளவரசர் ஸ்ரீ கிருஷ்ணர்

அறம் தாங்கி நிற்பவன் அரசன். அன்புக் கரங்களால் அரவணைப்பவன் அரசன். அறிவுச்சுடர் மகுடம் தரித்தவன் அரசன். அள்ளிக் கொடுப்பவன் அரசன். தீயசக்திகளை தீக்கிரையாக்குபவன் அரசன். அமைதி வழி நடப்பவன் அரசன். இத்தனை சிறப்பு பெற்ற அரசனை போன்ற மரம் அரசமரம். அரசனை போன்ற காய் அரசாணிக்காய்.

சுருங்கி விரியும் உடல் உறுப்புகள் தசைகளாலானது. உடல் உள் உறுப்புகள் கீழே இறங்கிடாது எலும்போடு கட்டி அணைத்திருப்பது தசைகள். உயிர்காக்கும் மூச்சுக்காற்றின் இயக்கத்திற்கு காரணமே உதரவிதான தசைகள். நிற்க, நடக்க, ஓட என எதையும் செய்வதற்கு தேவை தசைகள். நான் அசைந்தால் அசையும் அகிலமுமே என்ற பாடலைப் போல் தசை இயங்க அசையும் முழுஉடலும், தசைகள் முடங்க சப்தநாடிகளும் அடங்கிவிடும்.

ஆறு சுவைகளின் அரசன் இனிப்பு. இனிக்கும் கரும்பை கொண்ட தேவி, இராஜ இராஜேஸ்வரி. இனிப்புச் சுவைதான் தசைகளை பலப்படுத்துகிறது. முக்கியமாக குழந்தைகளுக்கு தசை வளர்ச்சியடையவும் வயோதிகர்களுக்கு தசைகள் தளர்ச்சியடையாமல் பாதுகாக்கவும் இனிப்பு சுவை அதிகம் தேவைப்படுகிறது. பத்து வயது வரை இனிப்பு தரப்படாவிட்டால் அவர்கள் வாழ்நாள் முழுக்க பலவீனமானவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இனிப்பு உண்ணாததால் தசைகள் பலவீனப்படும். தசை பலவீனமானால், தசை பிடிப்பு, மாறுகண், நிறக்குருடு, குளிரால் காதுவலி, நுகர்வுத்திறன் இழப்பு, திக்குவாய், குருகிய நெஞ்சுக்கூடு, விக்கல், குடல் இறக்கம், தானாக மலம், சிறுநீர் கழித்தல் ஆகியவை உண்டாகும்.

இனிப்பில் இயற்கை மற்றும் செயற்கை என இருவகை உண்டு. இயற்கையான இனிப்புச்சுவை கரும்பு, அரசாணிக்காய், சப்போட்டா, கோதுமை போன்றவைகளில் உள்ளது. கர்பிணிப் பெண்கள் ஒரு கைப்பிடி முளை கட்டிய கோதுமையை உண்டு வந்தால் அவர்களுக்கு சுகப்பிரசவம் என்பது எழுதப்படாத சட்டம். அவர்களுக்கு அறுவை சிகிச்சை என்பது அசம்பவமாகும். வீரத்தை வெளிப்படுத்தும் தமிழ் கடவுளான, தேவ சேனாபதி, முருகப் பெருமானுக்கு இனிப்பான பஞ்சாமிர்தம் படைக்கப்படுகிறது. இதன் உண்மையான பொருள், இனிப்பு உண்ணாது ஆண்மை பெருகாது. இதற்கு மேலும் விளக்கம் கேட்பவர்களுக்கு கடவுளாலும் புரிய வைக்க முடியாது.

செயற்கையான இனிப்பு அஸ்கா சர்க்கரை. உண்மையில் அது இனிப்பை போன்ற சுவை கொண்ட ஒரு வேதிப்பொருள். அதனால் தயாரிக்கப்பட்ட பொருட்களை இனிப்பு என்று சொல்வது இனிப்பு சுவையை சந்தி சிரிக்க வைப்பதற்கு சமமாகும். இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வந்து விடும் என்று ஒரு முட்டாள் சொல்வதை பல கோடி முட்டாள்கள் நம்புவது கலியுகத்தின் தர்மமாகும். உண்மையில் சர்க்கரை நோய் என்பது நாம் உபயோகிக்கும் பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாயின் காரணமாக வருவதாகும். இனிப்பிற்கும் சர்க்கரை நோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சொல்லப் போனால் சர்க்கரை நோய்க்கு இனிப்புதான் மருந்து.

இனிப்புக்கு எதிர்மறை சுவை உவர்ப்பு, அதாவது உப்பு. உப்பு அதிகமானால் தசை அழியும் நோய் உண்டாகும். இனிப்புக்கு இணைக்கும் தன்மை உண்டு. உவர்ப்புக்கு பிரிக்கும் தன்மை உண்டு. அதிகமான உப்பு அறிவாற்றலை குறைத்திடும், சிந்தனைகளை தடுமாறச் செய்யும், ஆசைகளை தூண்டும், வெறுப்பை வளர்க்கும், உள் உணர்வுகளை காயப்படுத்தும், முக்கியமாக இரத்தத்தை கெடுத்துவிடும். இதன் மூலம் மொத்த உடலும் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளும். இதற்கு பரிகாரமாக வெண்டைக்காய் மற்றும் அரசாணிக்காயை உண்டாலே போதுமானது.

கலியுகத்தில் உப்புகரிக்கும் கடல் நீரானது சத்தியயுகத்தில் இனிக்கின்றது. எண்ணம் போல் வாழ்வு மட்டுமல்ல, எண்ணம் எப்படியோ உலகமும் அப்படியே. இனிமையிலும் இனிமையான அன்பைக் கொண்டுதான் மனிதன் மகிழ்ச்சியாக வாழ்ந்திட முடியும். அப்படி அன்பில்லாவிட்டால், தொட்டது அனைத்தும் வம்பில் தான் முடியும். அன்பே சிவன்.

விநாயகர் சதுர்த்தி

மனிதன் எதிர்பார்ப்பு மற்றும் பாரபட்சம் பார்த்திடாது உயிர் மீது அன்பு செய்யவேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் போது பல்வேறு மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றான். எதார்த்தத்துடன் யாருடனும் பழக முடியாத நிலை, பொது நலத்தில் ஓர் சுயநலம், குறுகிய மனப்பான்மை, செல்வத்தை, அதிகாரத்தை அல்லது உறவுகளை பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்பாத மனம், உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் நாம் உண்ணவே படைக்கப்பட்டுள்ளது என தன் மனசாட்சியை அழித்து விட்டு உயிர்களை கொன்று குவித்து அதன் சதையை விற்ப்பது மற்றும் தின்பது, ஆன்மிகத்தை கேலிக்கையாக்குதல், அறிவியல் சாதனங்களை துஷ்பிரயோகம் செய்தல், குடும்பத்தை பிரித்தல், பிறருடைய தோல்வியை மானசீகமாக விரும்புதல், பிறருடைய வெற்றியை மனமுவந்து பாராட்ட மனம் வேதனை அடைதல், உறவுகளுக்கு கௌரவம் என்னும் சாயம் பூசுதல், பயனில்லை என கருதி உறவுகளை முறித்துக் கொள்ளுதல், பயன் உண்டு என கருதி வெட்கமின்றி மீண்டும் அதே உறவினை தக்க வைத்தல், இரத்த சம்பந்தம் அல்லாத உறவுகளை ஏற்றுக்கொள்ள பெறும் தயக்கம் காட்டுதல் என அன்பிற்கான எல்லை கோடுகளை தகர்த்தெரியும் வைபவமே விநாயகர் சதுர்த்தி.

அனைவரிடத்திலும் அன்பு, அனைவருக்காகவும் வாழ்வு என்னும் பேருள்ளம் கொண்டு வாழும் மனிதனே இந்த விண்ணிற்கும், மண்ணிற்க்கும் நாயகன், அதாவது விநாயகன். அன்பிற்கு ஒரு விழா அதுவே விநாயகர் சதுர்த்தியாகும். அன்பினை முழுமைப் படுத்துவதே ஞானத்தின் சாரமாகும், அதுவே தேவ குணமாகும். இதனையே பிரஜா பிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயமானது ஞானயோகப் பயிற்சியாக கற்றுத்தருகிறது.

நம் உள்ளத்தில் அன்பின் எல்லைக் கோடுகளை அழித்துக்காட்டுவதன் மூலம் உலக வரைபடத்தில் உள்ள எல்லைக் கோடுகள் நிச்சயம் ஒரு நாள் அடையாளமின்றி அழிந்து போகும். அவ்வாறாக முதன் முதலில் இப்பூமியில் செய்து காட்டியவரே ஸ்ரீகிருஷ்ணர். பூமியின் எட்டு திசையிலும் அன்பை மட்டுமே கொண்டு ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்து காட்டிய தன் நினைவுச்சின்னமாக கோகுலாஷ்டமி என்னும் விழா கொண்டாடப்படுகிறது.

அன்பினால் மட்டுமே உலகம் பிறக்கின்றது, சுழலுகின்றது மேலும் அன்பின் வீழ்ச்சியாலே உலகம் அழிந்து சாம்பலாகின்றது. விநாசகாலே விபரீதபுத்தி. அன்பில்லாத புத்தியால் உலகம் விநாசமாகும் அதாவது அழியும். அன்பை இழக்க ஒரு குடும்பம் பல துண்டுகளாகும், அன்பை வளர்க்க உலகம் ஒரு குடும்பமாகும். அன்பே சிவம். அன்பில்லாவிட்டால் அது சவம். அன்பே ஆதியும் அந்தமுமானது.
அரசாணிக்காயின் நன்மைகள், பயன்கள், பலன்கள், மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி பாடலாக காணொளியில் கேட்டு, கண்டு மகிழுங்கள்
அரசாணிக்காய்
ஆவணி மாதம்
1. உடல் செயல்பாடுகள் : 
          தசை மண்டலம்
2. இராசி நிலை : சிம்மராசி மண்டலம்
3. காய்கறி : அரசாணிக்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் பி7
5. தத்துவம் : நெருப்பு
6. தோஷம் : பித்தம்
7. துருவம் : ஆண்
8. பருவம் : மழை காலம்
9. நேரம் : மாலை 6 முதல் இரவு 8 வரை
10. குணம் : அன்பு
11. வைபவம் : 
          விநாயகர் சதுர்த்தி, 
          கோகுலாஷ்டமி
12. ஞானம் : 
          உலகின் முதல் 
          இளவரசர் ஸ்ரீ கிருஷ்ணர்
Contact Us
Mail Us
vegetableclinic@gmail.com