வாழைக்காய்
பங்குனி மாதம்
1. உடல் செயல்பாடுகள் : 
          இரத்த ஓட்ட மண்டலம்
2. இராசி நிலை : மீன இராசி மண்டலம்
3. காய்கறி : வாழைக்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் ஈ
5. தத்துவம் : நீர்
6. தோஷம் : கபம்
7. துருவம் : பெண்
8. பருவம் : வெயில் காலம்
9. நேரம் : காலை 8 முதல் 10 வரை
10. குணம் : நேர்மறை எண்ணங்கள்
11. வைபவம் : இராம நவமி
12. ஞானம் : 
          பரமாத்மா, 
          மனித குலத்தின் விதை வடிவம்
                                                                                                                                 
தூய்மை இல்லாத குளத்தின் நீரில் ஒட்டாமல் இருக்க தாமரையானது நீண்டு வளர்ந்து தனது தனித்துவத்தை காட்டுகிறது. தேவதைகளை தாமரை மலரின் மேல் அமர வைப்பதன் நோக்கம் இதுவே. என்றும், எப்பொழுதும் நல்லதையே பார்க்க, கேட்க, பேச மற்றும் செய்ய விரும்பவேண்டும். அப்படி நல்லவை விரும்பாதவர்களுக்கு நல்லது நடக்க வாய்ப்பில்லை. வாழ்க்கையின் தரத்தின் அளவு கோல் பொருளாதாரம் அல்ல. மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமாகும். தீயோர் மத்தியில் நல்லோராக வாழந்து காட்டுபவர்கள் தேவர்களை விட பல ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்கள்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, இது பழமொழி. குற்றம் பார்க்கின் இருதய தொல்லை, இது புதுமொழி. இருதய படபடப்பு, இருதயத்தில் வலி, திடீரென வியர்த்தல் ஆகியவை மன அழுத்தத்தால் உண்டாவது. மகிழ்ச்சி தான் இருதயத்திற்கு டானிக். கவலை, பயம், குழப்பம் இருதயத்திற்கு நெருக்கடியை கொடுக்கும். வாழைக்காயை அதன் தோலுடன் சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிட்டால் உடன் நிவாரணம் கிடைக்கும். கரை பிடிக்கும் என அஞ்சத் தேவையில்லை ஆயிரத்தில் ஒருவருக்கு கரை பிடிக்கலாம். வாழைக்காயை தேன் அல்லது நாட்டுச் சர்க்கரையுடன் தொட்டு சாப்பிட்டால் பற்களில் கரை பிடிக்காது. முப்பது சதவிகிதம் மட்டுமே செயல்படும் இருதயம் முப்பது நாட்களில் புத்துயிர் பெற முடியும் என்றால் உலக அதிசயங்களில் வாழைக்காயிற்கே முதல் இடம். சிவந்த கண்கள், கூச்சமான காதுகள், நாக்கில் வெண்பூச்சு, மூக்கில் இரத்தம் வடிதல், தூசியால் மூச்சுத் திணறல், தோள்பட்டை வலி, கழுத்து வலி, அடிக்கடிச் சோர்வு, எதுக்களித்தல், கட்டுப்படுத்த முடியாத சிறுநீர் மற்றும் மலம் ஆகியவை இரத்த ஓட்டத்தின் பலவீனத்தின் அடையாளங்களாகும்.

இரத்த நாளங்கள் வழியாக இரத்தம் ஒவ்வொரு அங்கத்தையும் சேர்ந்தடைகின்றது. இருதயம் மற்றும் இரத்த நாளங்கள் நன்கு சுருங்கி விரிய துவர்ப்பு சுவை தவிர்க்க முடியாத ஒன்று. வாழைக்காயின் துவர்ப்பானது உடலை துவண்டு போகாது காத்திடும். ஒரு வாழைக்காயை உண்டால் நான்கு மணி நேரம் பசியே எடுக்காது. அத்துனை சக்திகளை பெற்றுள்ளது. சிறுவர்களுக்கு சுறுசுறுப்பு, இளைஞர்களுக்கு இளமை, வயதோருக்கு வலிமை என அனைவரும் வாழ, வாழைக்காய் துணை நிற்கின்றது. உடலையும் மனதையும் கட்டுப்படுத்த துவர்ப்பு நிச்சயம் தேவை. துவர்ப்புக்கு எதிர் சுவை புளிப்புச்சுவை. புளி, வெங்காயம், பூண்டு ஆகிய ஆன்டிபயாடிக் மருந்தாகும், உணவாகாது.

கால்களுக்கு சென்ற இரத்தம் மீண்டும் இருதயத்தை அடைய துவர்ப்பு தேவை. துவர்ப்பு இல்லாத உணவால் இரத்த ஓட்டத்தில் தோய்வு ஏற்பட்டு, கால்பாத எரிச்சல், வலி, வெடிப்பு, மரத்து போதல், நிறமாற்றம், இழுப்பது, குடைச்சல், அரிப்பு, புண்கள், வியர்வை, சுருக்கம், வெண்ணிறபூச்சு என கால் பாதத்தில் பலவித உபாதைகள் உண்டாகிறது. கால் வீக்கம், மூட்டு வலி, வெரிகோஸ் வெயின், டிவிடி போன்றவைகளுக்கும் வாழை தேவை. கால் பாதங்களை இரண்டாவது இதயம் என்றழைப்பதுண்டு. இரத்த ஓட்டம், நிணநீர் ஓட்டம் மற்றும் வாயுமண்டலம் இம்மூன்றும் இணைந்து செயல்படுகிறது. ஒன்றின் தேக்கம் மற்ற இரண்டையும் பாதிக்கும். இணைப்புத் திசுவை பலப்படுத்தும் வாழைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய் ஆகிய இம்மூன்றையும் சேர்த்து உண்ண இளமை கொஞ்சும்.

உறுப்புகள் பெருத்து விடுதல், முக்கியமாக இதயம், உறுப்புகள் தளர்ந்து விடுதல், முக்கியமாக குடல், ஆகியவைக்கு வாழைக்காயை விட வாழைப் பூ சிறப்பானது. வாழைத் தண்டானது எலும்பு மஜ்ஜையின் கிருமிகளையும் அழிக்கவல்லது. ஆறாத சர்க்கரை நோய் புண்களுக்கு இம்மூன்றும் அருமருந்து. கடுமையான தோள்பட்டை வலிக்கு வாழைத்தோல் வழி வகுக்கும். பல வருடங்களாக தீர்வே இல்லாத இரிடபுள் பவல் சிண்றோம் மற்றும் இன்பிலே மபுள் பவள் சிண்றோம் ஆகிய நோய்க்கு வாழைக்காய் மற்றும் பச்சை கோதுமை மாவு உருண்டை சில நிமிடங்களில் விடை கொடுத்து அனுப்பி விடும். இதெல்லாம் கதையல்ல நிஜம். நம்மை வாழவிடாது மனிதர்களையே சந்தைப் பொருளாக்கும் இவ்வுலகில் நம்மை வாழவைக்கும் வாழையை இனி நாம் வாழவைப்பது நம் கடமை. நம் கடமையை செய்தால் வாழையானது வாழையடி வாழையாக நம்மை வாழ வைக்க துணை நிற்கும்.

இராம நவமி*

குற்றம் குறைகளை அதிகமாக உற்று நோக்குதல், ஏதேனும் காரணங்களை காட்டி உறவுகளை முறித்துக் கொள்ளுதல், வாய்ப்பு கிடைக்கும் போது விமர்சனங்களை கொட்டி தீர்த்துவிடல், சிறிய முயற்சியை விடா முயற்சி செய்ததாக பெருமைபடுதல், ஒவ்வொரு மனிதனின் பண்பு, திறமை, மற்றும் ஆற்றலானது வேறுபடும் என்பதனை ஏற்க மறுத்தல், எந்த ஒரு பிரச்சினையானாலும் அதற்கு நிச்சயம் ஒரு தீர்வு உண்டு என்று நம்ப மறுத்தல், ஆகியவை அனைத்தும் எதிர்மறை உணர்வுகளின் அடையாளமாகும். நேர் மறையான எண்ணங்களுடன் வாழ வைப்பதற்கான வைபவம் தான் இராம நவமி. பிரஜா பிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயமானது நேர்மறை அடையாளங்கள் மூலம் நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் பயிற்சியினை அளிக்கின்றது. ஒரு ஜீவாத்மா அதாவது ஒரு மனிதன் உண்மையான ஆன்மாவின் அடையாளங்களை மறந்து விட்டு அதற்கு எதிர்மறையாக உடல் அடையாளங்களை தன்னுடையது என நினைப்பதன் பெயர் மாயையாகும். முக்கியமாக ஆறு உடல் அடையாளங்கள் உண்டு. அவை,

1. நான் இந்த குடும்பத்தை சார்ந்தவன்
2. நான் இந்த இனத்தை சார்ந்தவன்
3. நான் இந்த மொழியை சார்ந்தவன்
4. நான் இந்த தேசத்தை சார்ந்தவன்
5. நான் இந்த மார்க்கத்தை சார்ந்தவன்
6. நான் ஒரு ஆண் அல்லது நான் ஒரு பெண்

மேலே கொடுக்கப்பட்டவை எதிர்மறை அடையாளங்களாகும். இப்பொழுது ஆன்மாவின் நேர்மறை அடையாளங்களைப் பற்றி பார்ப்போம்.

1. சுய மரியாதை : 
          நான் அழிவற்ற ஆத்மா

2. சுய ரூபம் : 
          நான் ஒரு ஒளிப் புள்ளியானவன்

3. சுய மந்திரம் : 
          நல் எண்ணங்கள், சிந்தனைகள், காரியங்களை படைப்பவன்

4. சுய தந்திரம் : 
           நான் பெயர் மற்றும் உருவங்களைக் கடந்து செல்பவன்

5. சுய தர்மம் : 
           நான் அமைதி சொரூபமான ஆத்மா

6. சுய தேசம் : 
           என்னுடைய வீடு ஆத்ம உலகம்

7. சுய இராஜ்யம் : 
           அதிகாரம் நான் செய்பவன் அல்ல செய்விப்பவன்

வாழைக்காயின் நன்மைகள், பயன்கள், பலன்கள், மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி பாடலாக காணொளியில் கேட்டு, கண்டு மகிழுங்கள்
வாழைக்காய்
பங்குனி மாதம்
1. உடல் செயல்பாடுகள் :
          இரத்த ஓட்ட மண்டலம்
2. இராசி நிலை : மீன இராசி மண்டலம்
3. காய்கறி : வாழைக்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் ஈ
5. தத்துவம் : நீர்
6. தோஷம் : கபம்
7. துருவம் : பெண்
8. பருவம் : வெயில் காலம்
9. நேரம் : காலை 8 முதல் 10 வரை
10. குணம் : நேர்மறை எண்ணங்கள்
11. வைபவம் : இராம நவமி
12. ஞானம் :
          பரமாத்மா,
          மனித குலத்தின் விதை வடிவம்
Contact Us
Mail Us
vegetableclinic@gmail.com