எலுமிச்சைத்தோல்
தை மாதம்
1. உடல் செயல்பாடுகள் : 
          நாளமில்லா சுரப்பி மண்டலம்
2. இராசி நிலை : மகர ராசி மண்டலம்
3. காய்கறி : எலுமிச்சைத்தோல்
4. ஊட்டச்சத்து : விட்டமின் பி6
5. தத்துவம் : நிலம்
6. தோஷம் : வாதம்
7. துருவம் : பெண்
8. பருவம் : குளிர் காலம்
9. நேரம் : அதிகாலை 4 முதல் 6 வரை
10. குணம் : பொறுமை
11. வைபவம் : ரத சப்தமி
12. ஞானம் : மூன்று உலகங்கள்

அமைதியில் மூன்று வகைகள் உண்டு.

1. மயான அமைதி பொறுமையாகும், எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும்.

2. ஆழ்ந்த அமைதி சகிப்புத் தன்மையாகும், வந்த பிரச்சினையை சாதகமாக மாற்றி விடும்.

3. இனிமையான அமைதி தூய்மையாகும், பிரச்சினைகளே நம்முன் வராது.

நான் ஆசைப்பட்டது கிடைத்திட வேண்டும் அல்லது நான் நினைத்தது நடந்திட வேண்டும். இந்த எண்ணமானது சமுதாயத்தின் அனைத்து கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் உடைக்கும் வெறித்தனத்தை உண்டாக்குகிறது. இந்த வெறியை தனிப்பதற்காக அமைதி என்னும் தர்மத்திற்கான வழிகளை மக்களிடம் உறைக்கப்பட்டது. காலப்போக்கில், தர்மம் மதமாக மாறியது. மதம் மதங்களாக மாறியது. மதங்களுக்குள் வெறுப்பினை வளர்த்து மீண்டும் மக்களிடம் வெறித்தனம் உருவாகியது. அதாவது அமைதிக்காக சொல்லப்பட்ட வழி தடுமாறி மீண்டும் அமைதியின்மைக்கு திரும்பிவிட்டது. இறைவனிடம், எனக்கு இது வேண்டும், என ஜெபம் செய்வதால் அமைதியின்மை தொடரும். இறைவனிடம், கிடைத்ததற்கு நன்றி, என சொல்லி வழிபாடு செய்தால் மனதில் அமைதிதானாக குடி கொள்ளும். நன்றி பாராட்டியவர்களுக்கு சொர்க்கம். நன்றி கெட்டவர்களுக்கு நரகம்.

அமைதியின்மை முதன் முதலில் சுரப்பி மண்டலத்தையும் பின் முழு உடலையும் சிதைத்துவிடும். அமைதி இல்லை என்றால் நோய்க்கு தீர்வும் இல்லை, நோயை மாற்றவும் இயலாது, நோய் வராமலும் காத்திடவும் இயலாது. பேஷண்ட் என்ற நோயாளிக்கு பேஷண்ஸ் என்ற பொறுமை வேண்டும். கலவரத்தில் அமைதியின்மை காரணமாக திடீரென பொருட்சேதம், உயிர்ச்சேதம் உண்டாகிறது. அதுபோல அமைதியின்மையால் உடலில் சில உறுப்புகள் அல்லது பாகங்கள் திடீரென செயலிழந்துவிடும். திடீரென தலைசுற்றுதல், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, பார்வை இழப்பு, காது கேளாமை, சாப்பிட குடிக்க இயலாமை என ஏற்படும். தோல் சுருக்கம், தொண்டை வலி, வீக்கம், அடைப்பு, அமர்ந்து கொள்ள முடியாத நிலை உண்டாகும். ஒரு முழு எலுமிச்சம் பழத்தை தோலுடன் மற்றும் இரண்டு நாட்டுத்தக்காளியுடன் சேர்த்து அரைத்து பருக திடீரென ஏற்பட்டது தடாலென மறைந்து விடும்.

முற்காலத்தில் மக்கள் பயணம் செல்லும் போது வழியில் திடீரென ஏற்படும் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, குமட்டல், வாந்தி, பேதி ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வாக, உடனே ஒரு எலுமிச்சையை அதன் தோலுடன் கடித்து உண்பார்கள். நிவாரணம் பெற்று மீண்டும் பயணத்தை தொடருவார்கள். அதனால் பயணம் செல்பவர்களுக்கு முதல் உதவியாக கைகளில் எலுமிச்சையை கொடுப்பது நம் நாட்டின் பழக்கம். இதன் அர்த்தம் தடையற்ற பயணத்தில் வெற்றி உண்டாகட்டும் என்பதாகும்.

எலுமிச்சைச்சாறு குளிர்ச்சியை தருவது. எலுமிச்சைத்தோல் சூட்டைத்தருவது. இரண்டும் சேர்த்து உண்டால் எந்த எதிர்மறையும் உண்டாகாது. எலுமிச்சைச்சாற்றை விட தோலில் தான் மருத்துவ குணம் உள்ளது. அதனால் தான் அதை ஊறவைத்து வருடம் முழுவதும் பயன்படுத்துகிறோம். சமையலில் புளியைவிட எலுமிச்சை, தக்காளி மற்றும் மாங்காய் பொடி பயன்படுத்துவது பாதுகாப்பானது. புளியானது வெளி உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
கேன்சர் செல்கள் பரவாது இரும்பு கரம் கொண்டு அதனை கட்டுப்படுத்த எலுமிச்சையை விட ஒரு நல்ல பொருள் உலகில் ஏதுமில்லை. கல்லீரல் என்னும் காமதேனுவிற்கு எலுமிச்சைத்தோல் மற்றும் வெண்டைக்காய் தான் தீர்வு. தைராய்டு சுரப்பிகளுக்கு உறுதுணையானது. மன அழுத்தம் மற்றும் படபடப்பிற்கு முதல் மருந்து. பலவித மாதவிடாய் தொல்லைகளுக்கு விடை கொடுத்திடும் எலுமிச்சைத்தோல்.

ஐ.சி.யு.வில் நிகழ்த்தப்படும் பல அதிசயங்களை எலுமிச்சை சாதாரணமாக நிகழ்த்தி விடும். அப்பேற்பட்ட எலுமிச்சையை ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய ஒன்று. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே, இது பழமொழி. எலுமிச்சை இல்லாத வீட்டிற்கு செல்லாதே, இது புதுமொழி.

ரத சப்தமி

மனிதன் எதை பெறுவதானாலும் காலம் கனியும் வரை காத்திருக்க வேண்டும். அவ்வாறல்லாது அதற்கு முன்பே பலனை பெற விரும்பும் போது பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாகின்றான். எதுவும் உடனே நடந்திட வேண்டும் என்னும் அவசரம், கொடுப்பதைவிட பெறுவதை அதிகம் விரும்புதல், முன்னேற்றத்தை பொருளாதார அடிப்படையில் புரிந்து கொள்ளுதல், பண்படாததால் பயனற்ற விஷயங்களின் உலகத்தில் மூழ்குதல், கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்யிற்கு அலைதல், நிதானத்தை தாமதம் என்று நினைத்தல், நிரந்தர தீர்வுகளை ஒத்தி வைத்தல், போன்ற பல விதமான மன அமைதியின்மையினை அகற்றி மனதை ஒரு முகப்படுத்திடும் வைபவமாக கொண்டாடப்படுவது தான் ரத சப்தமி. பிரஜா பிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயமானது மனதை ஒரு முகப்படுத்தும் பயிற்சியை கற்றுத் தருகிறது. மனமானது பல முகங்களை விரும்புவது. அதனால் அது சதா அசைந்து கொண்டே இருக்கக் கூடியது. புத்தி என்பது நடு நிலையை விரும்புவது. அதனால் அது சதா அசையாமல் ஒரே நிலையில் நிற்க்கக் கூடியது. இவை இரண்டும் நம்முடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களாகும். பல முகங்களை விரும்பும் மனதிற்கு புத்தியானது ஒவ்வொரு முகமாக காட்டி அதன் அனுபவத்தில் இலயிக்க வைத்து அமைதி படுத்துகிறது. பல முகங்கள் என்பது பல உறவுகளாகும்.

1. அன்பின் முகம் தந்தையாக, தியாகத்தின் முகம் தாயாக

2. எளிமையின் முகம் மாமனாக, தூய்மையின் முகம் அத்தையாக

3. துணிவின் முகம் சகோதரனாக, மனசாட்சியின் முகம் சகோதரியாக

4. பணிவின் முகம் கணவனாக, சகிப்புத் தன்மையின் முகம் மனைவியாக

5. திருப்தியின் முகம் மகனாக, அமைதியின் முகம் மகளாக

6. நம்பிக்கையின் முகம் குருவாக, நல்லெண்ணத்தின் முகம் ஆசிரியராக

7. ஞானத்தின் முகம் ஆண்டியாக, அதிகாரத்தின் முகம் அரசனாக

ஆக மனமானது இவ்வாறு பிடிவாதமாக பல முகங்களை விரும்பும் காரணத்தால் ஜோதி புள்ளி வடிவமான பரமாத்மாவை, இறைவனை, பல விதமாக உருவகப்படுத்தி பக்தி செய்யப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள உறவுகளை ஒலி மற்றும் ஒளியை கடந்த உலகில் வசிக்கும் பரமாத்மாவுடன் இணைப்பது தான் இராஜயோகமாகும். இதுவே நினைவு யாத்திரையாகும், இதனால் மட்டுமே மனதினை ஒரு முகப்படுத்த முடியும்.
எலுமிச்சைத்தோலின் நன்மைகள், பயன்கள், பலன்கள், மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி பாடலாக காணொளியில் கேட்டு, கண்டு மகிழுங்கள்
எலுமிச்சைத்தோல்
தை மாதம்
1. உடல் செயல்பாடுகள் :
          நாளமில்லா சுரப்பி மண்டலம்
2. இராசி நிலை : மகர ராசி மண்டலம்
3. காய்கறி : எலுமிச்சைத்தோல்
4. ஊட்டச்சத்து : விட்டமின் பி6
5. தத்துவம் : நிலம்
6. தோஷம் : வாதம்
7. துருவம் : பெண்
8. பருவம் : குளிர் காலம்
9. நேரம் : அதிகாலை 4 முதல் 6 வரை
10. குணம் : பொறுமை
11. வைபவம் : ரத சப்தமி
12. ஞானம் : மூன்று உலகங்கள்
Contact Us
Mail Us
vegetableclinic@gmail.com