வெண்டைக்காய்
மாசி மாதம்
1. உடல் செயல்பாடுகள் : 
          நாளமுள்ள சுரப்பி மண்டலம்
2. இராசி நிலை : கும்ப இராசி மண்டலம்
3. காய்கறி : வெண்டைக்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் பி 3
5. தத்துவம் : காற்று
6. தோஷம் : பித்தம்
7. துருவம் : ஆண்
8. பருவம் : வெயில் காலம்
9. நேரம் : காலை 6 முதல் 8 வரை
10. குணம் : திருப்தி
11. வைபவம் : மஹா சிவராத்திரி
12. ஞானம் : 
          அனைத்து ஆத்மாக்களின் தந்தை

அன்பை பிறருக்கு கொடுக்க வேண்டும். மரியாதை தனக்கு தானே கொடுத்துக் கொள்ளவேண்டும். அதன் பெயர் சுயமரியாதை. அதாவது என்னுடைய எண்ணம், சொல், செயலுக்கு நானே மதிப்பீடு போட்டுக் கொள்ளவேண்டும். மதிப்பு குறைவதும் உயருவதும் என் கையில் உள்ளது. ஹனுமனுக்கு இராவணனின் அவையில் இருக்கை தராத பட்சத்தில் தன் வாலை சுருட்டி அவனை விட சற்று உயரத்தில் அமர்ந்து பேசியதாக கூறப்படுகிறது. இதில் கதாபாத்திரத்தை விட, கதையை தாங்கி நிற்கும் கருத்து தான் முக்கியம். ஒரு மனிதனுக்கு சுயமரியாதை இருக்கும் பட்சத்தில் இன்னொரு மனிதனுக்கு தலை வணங்க வேண்டிய கட்டாயம் இல்லை. சுயமரியாதை என்னும் அஸ்திவாரத்தின் ஆதாரத்தில் தான் ஒரு தர்மம், ஒரு இராஜ்யம், ஒரு இனம் மற்றும் ஒரு மொழி ஆகிய தூண்கள் வெளிப்படுகிறது.

சுயமரியாதையின் எதார்த்தத்தை அறியாததைப் போல், நாளமுள்ள சுரப்பிமண்டலத்தின் செயல்பாடுகளைப் பற்றிய எதார்த்தம், மருத்துவத்துறைக்கு இல்லை. உடலில் ஏற்படும் பெரும்பாலான உபாதைகளுக்கான ஆரம்பப்புள்ளி இதுவே. உடலில் உள்ள ஈரப்பதத்தை தக்கவைப்பது தான் சளி சவ்வுப்படலத்தின் மிக முக்கிய பணியாகும். உப்பு, காரம், புளியை பயன்படுத்தும் போது சவ்வுப் படலமானது அரித்து வெளியேற்றப்படுகிறது. மீண்டும் உருவாக ஊட்டச்சத்து மற்றும் நேரம் தேவைப்படுகிறது. முழுமையாக உருவாகாத பட்சத்தில் உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது. அதாவது திசுக்களுக்கு சீராக தொடர்ந்து இரத்தம் கிடைக்காமல் வஞ்சிக்கப்படுகிறது. கை, கால் மரத்து போவது, வெயிலில் சென்றால் தலைவலி, கூர்மையில்லாத பார்வை, காது, மூக்கு, வாய், தொண்டை அனைத்திலும் உலர்ந்த வறட்சி நிலை, வறட்டு இருமல், விக்கல், ஏப்பம், அடிக்கடி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் போன்ற உபாதைகள் உண்டாக காரணமாகின்றது.

4 வெண்டைக்காயை மூன்று நேரமும் உணவிற்கு முன்பு நன்கு மென்று உமிழ்நீருடன் கலந்து பருக, மேலே குறிப்பிடப்பட்டுள்ள உபாதைகள் எத்தனை வருடங்களாக இருந்தாலும் சில நாட்களில் சுகமானதாக மாற்றி விடும். நூறு மருந்துகள் இந்த உலகில் இருக்கலாம், வெண்டை ஒன்றைப் போல் வேறொன்று இருக்க முடியுமா?

எல்லா காய்கறி பழங்களிலும் இயற்கையாகவே ஒரு உப்புச்சுவை உள்ளது. அதுவே போதுமானது. ஆனால் நாம் சமையலில் சேர்க்கும் உப்பால் உடல் சீரழிகின்றது. உப்பிற்கு அடிமையானால், பின் நோய்க்கு அடிமை, அதன் பின் மருத்துவ துறைக்கு நிரந்தர அடிமைகளாகின்றோம். மருத்துவத்திற்கு மட்டும் அல்ல உணர்ச்சிகளுக்கும் உப்பு அடிமையாக்கி விடும். முக்கியமாக காமம், கோபம் ஆகிய இரு உணர்வுகளை தவிர்ப்பது என்பது கடும் சவாலாக இருக்கும். உப்பு வேண்டும் என்ற சத்தியாகிரகத்தை விட, உப்பு வேண்டாம் என்ற சத்தியாகிரகம் தான் வீட்டிற்கும், நாட்டிற்கும் தேவை.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீரில் தேவையான அடிப்படை தாதுச்சத்துக்கள் கூட இருப்பதில்லை. இருக்கும் சிறிதளவு தாதுச்சத்தும் சுத்திகரிப்பதால் நஷ்டமடைகின்றது. சாதாரணமாக கிடைக்கும் பில்டரில் நீரை வடிகட்டி பின் அதனை ஒரு மண்பானையில் ஊற்றி வைக்கவேண்டும். சீரகம், சோம்பு மற்றும் ஓமம் ஆகியவை சிறிதளவு ஒரு பருத்தி துணியில் கட்டி அதில் போட, தண்ணீர் மீண்டும் உயிர் பெற்றிடும். குடிநீர் மற்றும் சமையல் ஆகிய இரண்டிற்கும் இந்நீரையே பயன்படுத்த வேண்டும்.

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்றால் தாதுப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்று பொருள். காலப்போக்கில் மறுவி அர்த்தம் அனர்த்தமாகி விட்டது. மனிதனுக்கு ஊட்டச்சத்து எத்துணை முக்கியமோ அதேபோல் தாது சத்து மிக முக்கியமானது. ஊட்டச்சத்து, தாதுச்சத்து இவ்விரண்டும் இல்லாத போது ஆணிடம் ஆண்மை இருக்காது, பெண்ணிடம் பெண்மை இருக்காது. இருவரும் பெர்டிலிடி சென்டருக்கு வாடிக்கையாளராகி பின் பெற்றோராக வேண்டும்.

கும்பத்திற்கு முதல் மரியாதை செய்து கும்பாபிஷேகம் பார்த்தால் கோடி நன்மை. சுயமரியாதையிலிருந்து வெண்டைக்காயை பச்சையாக உண்டால் பல்லாயிரம் கோடி நன்மைகள்.                                                                                                                         
மஹா சிவராத்திரி

சுய மரியாதையை விட பிறரிடம் அதிகம் மரியாதையை எதிர்பார்த்தல் அல்லது விரும்புதல், கௌரவம் காரணமாக பொருள், நேரம், உழைப்பு மற்றும் வாழ்க்கையை வீணடித்தல், விமர்சனங்களை கண்டு தடுமாற்றம் அடைதல், தன் நிலையே உன்னதமானது என்று உணராதிருத்தல், அதிகமாக பிறரோடு ஒப்பிடுதல், இன்பம், துன்பம், தீது, நன்று என அனைத்தும் பிறரிடமிருந்து தான் வருவதாக நம்புதல், எதை செய்தாலும் பிறர் அறியும் வண்ணம் நிகழ்த்த வேண்டும் என்ற ஆசை இவை அனைத்தும் தன்னை உணராத நிலையின் அடையாளமாகும். தன்னை உணராத காரணத்தால் மரியாதையை பற்றிய தெளிவான புரிதல் ஏற்படுவதில்லை. சுயமரியாதையில் நிலைத்திருப்பது என்பது தன்னை ஓர் அழிவற்ற ஆன்மா என்று உணர்வதாகும். ஆன்மா பரமாத்மாவின் அன்பை பெறாது அதன் மனம் திருப்தி அடைவதில்லை. பரமாத்மாவின் அன்பை பெற அவரை நினைவு செய்தாலே போதுமானதாகும். ஆனால் அவரைப் பற்றிய தெளிவான அறிமுகம் இருந்தால் மட்டுமே அவரை நினைவு செய்ய முடியும். அவ்வாறாக நினைவு செய்வதை வழியுறுத்துவதற்காக வேண்டி உருவாக்கப்பட்டது தான் மஹா சிவராத்திரியாகும். அவரை நினைவு செய்ய, மனதின் எல்லா இருளும் நீங்கும் என்பது தின்னம். நினைவு செய்யும் இக்கலையினை பிரஜா பிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தில் எளிய முறையில் மக்களுக்கு கற்பிக்கின்றது. பரமாத்மாவின் ஆறு அறிமுகங்களைப் பற்றிய விளக்கம் அளிக்கப்படுகிறது.
                                                                                                                                          
1. திரிநாமதாரி 
           தந்தையாக, தாயாக, துணைவனாகிறார் 

2. திரிரூபதாரி
          ஜோதிபுள்ளியாக, விதை விடிவாக, பலரூபமாகிறார்

3. திரிகுணதாரி 
          பிறப்பு, அனுபவம் மற்றும் சிந்தனைக்கு அப்பாற்பட்டவர்

4. திரிலோககதாரி 
          ஸ்தூல, சூட்சும, ஆத்ம உலகிற்கு அதிகாரியானவர்

5. திரிகாலதரிசி 
          சிருஷ்டியின் ஆரம்பம், மத்தியம், இறுதியை அறிந்தவர்

6. திரு மூர்த்தி ( சிருஷ்டியை படைத்து, காத்து, அழிப்பவர் )

சதா சர்வ காலமும் மேலே கொடுக்கப்பட்ட பரமாத்மா தந்தையின் மகிமையை மனதில் பாடிக் கொண்டே இருக்க, மனம் இயல்பாகவே திருப்தியடைகிறது. ஆத்மாவின் உண்மையான தாகம் தனிகின்றது. எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்னும் விதிக்கு ஏற்ப, பரமாத்மாவை நினைவு செய்யச் செய்ய அவருடைய மூன்றாம் கண் நமக்கும் கிடைக்கப் பெறுகிறது. இதுவே யோகத்தின் யதார்த்தம்.
வெண்டைக்காயின் நன்மைகள், பயன்கள், பலன்கள், மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி பாடலாக காணொளியில் கேட்டு, கண்டு மகிழுங்கள்
வெண்டைக்காய்
மாசி மாதம்
1. உடல் செயல்பாடுகள் :
          நாளமுள்ள சுரப்பி மண்டலம்
2. இராசி நிலை : கும்ப இராசி மண்டலம்
3. காய்கறி : வெண்டைக்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் பி 3
5. தத்துவம் : காற்று
6. தோஷம் : பித்தம்
7. துருவம் : ஆண்
8. பருவம் : வெயில் காலம்
9. நேரம் : காலை 6 முதல் 8 வரை
10. குணம் : திருப்தி
11. வைபவம் : மஹா சிவராத்திரி
12. ஞானம் :
          அனைத்து ஆத்மாக்களின் தந்தை
Contact Us
Mail Us
vegetableclinic@gmail.com