கோவைக்காய்
புரட்டாசி மாதம்
1. உடல் செயல்பாடுகள் : 
          தோல் மண்டலம்
2. இராசி நிலை : 
          கன்னிராசி மண்டலம்
3. காய்கறி : கோவைக்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் ஏ
5. தத்துவம் : நிலம்
6. தோஷம் : கபம்
7. துருவம் : பெண்
8. பருவம் : மழை காலம்
9. நேரம் : இரவு 8 முதல் 10 வரை
10. குணம் : தூய்மை
11. வைபவம் : நவராத்திரி
12. ஞானம் : 
          பாரதத்தின் உயர்வு 
          மற்றும் தாழ்வு

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

அகத்தூய்மை என்பது எண்ணம் சொல் செயலில் ஐந்து விகாரங்கள் இல்லாத நிலை. தூய்மையை கடைப்பிடித்த பிரம்மா, விஷ்வ மஹாராஜன், ஸ்ரீ நாராயணன் ஆகிறார். தூய்மையை கடைப்பிடித்த கன்னிகை, ஈஸ்வரனுக்கு துணையாக ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியாகிறார். தூய்மையை கடைபிடித்த கன்னிகைகள், பிரபஞ்சத்திற்கு அதிகாரியாக சப்த கன்னிகைகளாகின்றனர். தூய்மையை கடைப்பிடித்ததால், விண்ணிற்கே நாயகனாக விநாயகன் ஆகிறார். தூய்மையை கடைபிடித்ததால் உலகிற்கே தர்ம சாஸ்தாவாக ஐய்யப்பன் ஆகிறார். ஆக தூய்மையை கடைபிடிக்கும் போது மனிதன் தேவனாகின்றான். புத்தரின் கூற்றுப்படி ஆசைக்கு வசமாகி தூய்மையை பழிப்பவர்கள் அழிவை மட்டுமே பரிசாக பெறுவார்கள். இதுவே சத்தியம்.

புறந்தூய்மை நீரால் அமையும். தலை முதல் பாதம் வரை உடலுக்கு வெளியில் உள்ள சருமத்தை நீரால் தூய்மை படுத்துகிறோம். அதே போல் உடலுக்கு உள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தனிப்பட்ட முறையில் சருமம் உள்ளது. அந்த சருமமானது நிணநீரைக் கொண்டு தன்னைத் தானே தூய்மைபடுத்திக் கொள்கின்றது. சருமம் மற்றும் நிணநீர் ஆகிய இரண்டும் இணைந்து போராடி வைரஸ், பேக்டீரியா, பங்கஸ், போன்ற கிருமிகளை அழிக்கின்றது. முழு உடலுக்கும் பாதுகாப்பை தருவதுதான் தோல் மண்டலத்தின் முதன் முதல் கடமை. அழகை கொடுப்பது கூடுதல் பணியாக சேர்க்கப்பட்டது.

பழங்களை அதன் தோலை உரித்து விட்டு சாப்பிடுகிறோம். காய்கறிகளை அதன் தோலை நீக்கிவிட்டு சமைக்கின்றோம். நம் உடலில் உள்ள தோலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் காய்கறி பழங்களின் தோலில் உள்ளது. அதனை நீக்கிவிட்டு சாப்பிடும் பட்சத்தில் தோல் தன் பாதுகாப்பு பணியையும் செய்ய முடியாது அழகையும் தக்கவைக்க முடியாது. எந்தவித சரும நோய்களுக்கு எந்த காய்கறியின் தோலை சாப்பிட வேண்டும் என்பதை பார்ப்போம்.

எரிச்சலுக்கு வெண்பூசணித்தோல், பளபளப்பிற்கு சுரைக்காய்த்தோல், மருமங்கிற்கு கத்திரிக்காய்த்தோல், கொப்புளங்களுக்கு கொத்தவரங்காய்த்தோல், வெடிப்பிற்கு புடலங்காய்த்தோல், தடிப்பிற்கு அரசாணிக்காய்த்தோல், வெண்மைக்கு கோவைக்காய்த்தோல், அரிப்பிற்கு முருங்கைவிதைத்தோல், ஆராத புண்களுக்கு பீர்க்கங்காய்த்தோல், அதிக வியர்வைக்கு கொப்பரைத்தேங்காய், சுருக்கத்திற்கு எலுமிச்சைத்தோல், வறட்சிக்கு வெண்டைக்காய்த்தோல், சிவந்த காயங்களுக்கு வாழைக்காய்த்தோல்.

மேலே குறிப்பிட்ட காய்கறிகளின் தோலினை அரைத்து வடித்து அதனை பச்சைப் பயிறு மாவுடன் கலந்து சருமத்தின் மேலே பூசி பின் காயவிட்டு குளிக்கலாம். நல்ல பலனை தரும்.

சருமம் உருவாகுவதற்கு மிக முக்கிய மூலப்பொருள் கொழுப்பு. கெட்ட கொழுப்பு அதிகமாகும் போது பல உபாதைகள் உருவாகிறது. இரத்தகுழாய் அடைப்பு, கொழுப்புகட்டிகள், கடுமையான மலச்சிக்கல், நுரையுடன் சிறுநீர், வெளியேறாத நெஞ்சுசளி, கக்குவான் இருமல், காது, மூக்கு, தொண்டை, அடைப்பு, சுவையறியாத நாக்கு, மாலைக்கண் நோய், காதுகளில் சதை வளர்ச்சி, தூக்கிப் போடும் நரம்புகள், அதிக டிரைகிலிசரைடு கொழுப்பு, சொரியாசிஸ், வெண்குஷ்டம், டைப் ஒன் டயபிடீஸ் மேலும் நூற்றிற்கும் மேற்பட்ட உபாதைகள் உருவாகக் காரணமாகிறது. இவை அனைத்திற்கும் கோவைக்காய் பச்சையாக நன்கு மென்று கூழாக்கி உமிழ்நீருடன் பருகினால் நிச்சயம் குணமாகும்.

மிருகங்களின் தோலை உரித்து உண்பவர்களுக்கு தோல் நோய் வரும். மிருகத்தின் உயிரை துடிதுடிக்க கொன்றதால் இருதயப் படபடப்பு வரும். இவ்விரண்டும் வரவில்லை என்றால் மனதில் இனம் புரியாத பயம், மந்தபுத்தி, எதிர்பாராத விபத்துகள், தற்கொலை எண்ணம், தீயசக்திகளின் தொல்லை, என ஏதேனும் ஒன்று நிச்சயம் வரும். ஏனென்றால், தன்வினை தன்னைச்சுடும்.

நவராத்திரி

எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகிய இம்மூன்றிலும் தூய்மையை அதாவது வெளிப்படைத் தன்மையை இழக்கும் போது மனிதன் பல்வேறு மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றான். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுதல், பிறருக்காக என தன்னைதானே ஏமாற்றிக் கொண்டு வாழ்தல், புரியாத விபரத்தை புரிந்ததாக காட்டிக்கொள்ளுதல், உண்மையை உரக்கச்சொல்லாது மறைத்து வைத்தல், நிலையில்லாத உறவுகளை தன்னுடையதாக தக்க வைக்க பெரும் பாடுபடுதல், ஆசைகளை வெல்ல முடியாது அதனுடன் போராடிக் கொண்டே இருத்தல், அங்கீகாரம் வேண்டி கொள்கைகளை தளர்த்துதல், சிற்றின்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், அல்பகால பலன்களில் மனம் கவர்ச்சிப்படுதல், தவறினை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள முடியாது தவித்தல், விடுபட்ட மனோநிலையில் இருந்து விவகாரங்களை செய்யாது சூழ்நிலைகளை மேலும் சிக்கலாக்குதல், சிக்கனம் மற்றும் கஞ்சத்தனம் இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாது செல்வத்தை கையாளுதல், யாரும் சொல்லாது தனக்குத்தானே சில எல்லைகளை வகுத்துக் கொள்ளுதல், வழக்கத்தை பழக்கமாக மாற்றிக்கொள்ளுதல், தவறாகினும் பெரும்பாலானோர் செய்வதையே தர்மமாக ஏற்றுக் கொள்ளுதல், பாசத்தை அன்பாக கற்பனை செய்தல், விதி முறைகளில் சுலபமானவற்றை மட்டும் செயல்படுத்துதல், விட்டுக் கொடுத்து போவதால் கிடைக்கும் லாபம் பற்றி மிக துல்லியமாக கணக்கு போட்டு பார்த்தல், ஆகிய பலவிதமான அழுக்குகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் முயற்சியையே நவராத்திரி என்னும் வைபவமாக கொண்டாடப்படுகிறது. வாழ்வில் ஒன்பது வகையான இருளை கடப்பவர்களே வெற்றியாளர்கள். அவை,

செல்வம், சொல்வாக்கு மற்றும் உறவுகள் நிலையானது என்னும் அறியாமை இருள்

கவலை, பயம் மற்றும் குழப்பம் தவிர்க்க முடியாதது என்னும் அறியாமை இருள்

பிறப்பு, இறப்பு மற்றும் வாழ்வானது துன்பம் தருவது என்னும் அறியாமை இருள்

ஆகிய ஒன்பது வகை அறியாமை என்னும் இருளையும் ஆன்மிக கல்விகொண்டு அகற்றிடவேண்டும். இதனையே பிரஜா பிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் செய்து வருகிறது. ஞானம் நிறைந்த தேவர்கள் ஏன் அறியாமை நிறைந்த அசுரர்களாக ஆகிறார்கள்? பின் எப்படி மீண்டும் தேவபதவியை அடைகிறார்கள்? என்னும் ஆன்மிக வரலாற்றையே கொலு வைத்து நினைவு செய்யப்படுகிறது. சரஸ்வதி பூஜை என்பது ஆன்மிக கல்வியாகும். ஆன்மிகம் இல்லாது பௌதீகம் மட்டும் கல்வியாகாது.?
கோவைக்காயின் நன்மைகள், பயன்கள், பலன்கள், மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி பாடலாக காணொளியில் கேட்டு, கண்டு மகிழுங்கள்
கோவைக்காய்
புரட்டாசி மாதம்
1. உடல் செயல்பாடுகள் :
          தோல் மண்டலம்
2. இராசி நிலை :
          கன்னிராசி மண்டலம்
3. காய்கறி : கோவைக்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் ஏ
5. தத்துவம் : நிலம்
6. தோஷம் : கபம்
7. துருவம் : பெண்
8. பருவம் : மழை காலம்
9. நேரம் : இரவு 8 முதல் 10 வரை
10. குணம் : தூய்மை
11. வைபவம் : நவராத்திரி
12. ஞானம் :
          பாரதத்தின் உயர்வு
          மற்றும் தாழ்வு
Contact Us
Mail Us
vegetableclinic@gmail.com