முருங்கைவிதை
ஐப்பசி மாதம்
1. உடல் செயல்பாடுகள் : 
          சுவாச மண்டலம்
2. இராசி நிலை : 
          துலாராசி மண்டலம்
3. காய்கறி : முருங்கைக்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் பி12
5. தத்துவம் : காற்று
6. தோஷம் : வாதம்
7. துருவம் : ஆண்
8. பருவம் : மழை காலம்
9. நேரம் : இரவு 10 முதல் 12 வரை
10. குணம் : பணிவு
11. வைபவம் : தீபாவளி
12. ஞானம் : 
          உலக நாடக சக்கரம்

சமணம், சமநோக்கு, சமகாலம், சமசப்தம், சமஅளவு, சமபங்கு, சமபலம், சமத்துவம், சமஉரிமை, சமபந்தி, சமவாய்ப்பு என சமநிலையை அச்சாணியாகக் கொண்டு தான் உலகம் சுழன்று கொண்டிருக்கின்றது. அளவு குறையும் போதும், அளவு கூடும் போதும் சமநிலை என்னும் சட்டம் அதனை தானாகவே மாற்றியமைத்து விடும். இந்த சட்டத்தை இயற்றி இயக்கிக் கொண்டிருக்கும் படைப்பவர் மட்டுமே எல்லா அளவுகளையும் எல்லைகளையும் கடந்தவர். நாம் அனைவரும் எல்லைக்குட்பட்வர்கள்.

எல்லைக்குட்பட்ட இந்த உடல் சமநிலை தவறும் போது உயிர் பிரிகின்றது. சமநிலை என்பது சுவைகளிலும் உண்டு. இனிப்பு உப்பையும், கசப்பு காரத்தையும், துவர்ப்பு புளிப்பையும், சமன் செய்கிறது. ஆக நாம் அதிகம் பயன்படுத்தும் உப்பு, காரம், புளியை சமப்படுத்த இனிப்பு, கசப்பு, துவர்ப்பு தேவைப்படுகிறது. இம்மூன்றும் சுவையும் பெற்ற அறிய வகை காய்கறி, முருங்கைக்காய். முக்கியமாக முருங்கை விதை. முரட்டுத் தனமான முருங்கை விதையை முதலீடாக ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம் தொழிலாகவும் செய்யலாம்.

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்ற பழமொழிக் கேற்ப சிறியதாக உள்ள முருங்கை விதையின் மருத்துவ குணம் அளவிட முடியாதது. பிராணனை கொண்டு அப்பிராணனை வெளியேற்றுவதில் முருங்கைக்குதான் முதல் இடம். அடிவயிறு சுவாசத்தை தூண்டி நெஞ்சை நிமிர்த்தி நடக்கச் செய்திடும் முருங்கை. சிறுநீரககல், பித்தப்பைகல் மட்டுமல்லாது சளியையும் கரைத்து முருங்கை தங்கப்பதக்கம் பெற்றுள்ளது. குடியுரிமை பெறாது குடலில் தங்கியுள்ள பலவிதமான புழுக்களை மலம் வழியாக முருங்கை நாடு கடத்துகின்றது. அரிப்பை ஏற்படுத்தும் புழுக்களை அறிவிப்பில்லாமல் விரட்டியடிக்கின்றது முருங்கை. இறுகியமலத்தை இறுதிகட்டமாக வெளியேற்றுகிறது முருங்கை. நரம்பு முருக்கேற்றிட தேவை முருங்கை. கண்கண்ணாடிக்கு பணி ஓய்வு மற்றும் ஓய்வூதியமும் கிடைத்திட கண்களுக்கு முருங்கை எண்ணையை ஊற்றவேண்டும். காதிலும் மூக்கிலும் ஏற்படும் அரிப்பை அறுத்தெரிந்திடும் முருங்கை. மஞ்சள் நிறவாய் மற்றும் நாக்கை நாளடைவில் மாற்றிவிடும் முருங்கை. முருங்கை விதையின் சிறப்பை அனைவர் சிந்தனையிலும், மனதிலும் விதைத்திடுவோம்.

பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகியவை அன்றாட உணவாகும். பத்து சதவிகித மக்களுக்கு மட்டுமே பால் பொருட்களால் ஒவ்வாமை ஏற்படுவதில்லை. பால் குடலின் செயல்பாடுகளில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும். முக்கியமாக குடற்புழுக்களை பால்பொருட்கள் அதிகரிக்கின்றது. பெரும்பாலோரால் அந்த அறிகுறிகளை உணரமுடிவதில்லை. ஒரு சிலருக்கு இரத்தசோகை, விட்டமின் பி12 பற்றாக்குறை, கடுமையான தோல் அரிப்பு என ஏதேனும் ஏற்படலாம். கைக்குழந்தைகள் காரணமின்றி இரவு, பகலாக அழுதுகொண்டே இருக்கும். உண்மையான காரணம் குடற்புழுக்கள். சிறுகுழந்தைகள் மூக்கையும், ஆசனவாயையும் அடிக்கடி அரித்துக்கொண்டே இருப்பார்கள். அப்பொழுது இரண்டு முருங்கை விதையை நசுக்கி இரண்டு மணிநேரம் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரப்போட்டு பின் நீர் மற்றும் விதை இரண்டையும் குடிக்கவேண்டும். நல்ல பலனை முருங்கை நிச்சயம் தரும். பால் பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமைக்கு முருங்கை ஒரு வரப்பிரசாதம். பொதுவாக கால்சியம் சத்தினை பெறுவதற்கு எள்ளு, ராகி மற்றும் எலுமிச்சைத்தோல் ஆகியவை சேர்த்தாலே போதுமானது. பால் அவசியமில்லாத ஒன்று. பின் ஏன் பால் பிரபலமானது தெரியுமா உங்களுக்கு? இதற்கான பதில், பாரத நாட்டின் விவசாயத்திற்கு முதுகெலும்பாக இருந்த மாடுகளை அழித்துவிட பிரிடிஷ் அரசாங்கம் திட்டம் தீட்டியது. முதல் கட்டமாக இறைச்சிக்காகவும், மாட்டுத்தோலுக்காகவும் அதனை அழித்தனர். பின்னர் அடுத்த கட்டமாக பசுமாட்டின் பாலை மனிதன் நிச்சயம் சாப்பிடவேண்டும் என்ற வதந்தி பரப்பப்பட்டது. அனைவரும் பாலை பயன்படுத்த, தட்டுப்பாடு பெருகியது. பொருத்தமில்லாத காளைகளை கொண்டு சினையூட்டி அதன் மூலம் பெயர் தெரியாத பல வியாதிகளை உருவாக்கி மகிழ்ந்தனர். நாம் பாலுக்கு அடிமையானோம். பால், மிளகாய் மற்றும் கெமிக்கல் ஆடை இம்மூன்றையும் தூக்கி எறியாத வரை பாரதநாடு என்றும் அடிமையே. இதுவே இராஜ தந்திரம்.

தீபாவளி

நடு நிலையை தவறும் போது மனிதன் பல்வேறு மனஅழுத்தத்திற்கு ஆளாகிறான். தாழ்வு மனப்பான்மை, அதற்கு நேர்மாறாக அகங்காரம் என்னும் மனநிலை இப்படி அடிக்கடி மாறிக்கொண்டே இருத்தல், சமநிலைத் தன்மை அறியாது அதிகமாக விட்டுக் கொடுத்தல், அடிமைத்தனத்தை பணிவு என்று புது விளக்கமளித்தல், ஆணவத்தை கம்பீரம் என்று மாற்றி புரிந்து கொள்ளுதல், கடந்த காலத்தை பற்றிய கவலை, எதிர்காலத்தை பற்றிய பயம் இவ்விரண்டும் நிகழ்காலத்தில் வாழவிடாது அதனை நழுவவிடுதல், ஆகிய பலவித நிலையில்லாத மனநிலையை நிலை பெறச்செய்திட வைக்கும் வைபவமே தீபாவளி திருநாளாகும். அதாவது தீப ஒளித் திருநாளாகும். பிரஜா பிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயமானது ஞானஒளி கொண்டு நிலையற்ற மனதிற்கு ஆக்கப்பூர்வமான சிந்தனைப் பயிற்சியினை அளிக்கின்றது. உடல் என்னும் கூட்டில் ஆத்மா வசிக்கின்றது. ஆத்மா ஒளிப்புள்ளி வடிவமானது. பரமாத்மா, அவரும் ஒளிப்புள்ளி வடிவமானவர். ஆத்மா அழிவற்றது. ஆனால் ஆத்மா தனது சக்தியினை இழக்கின்றது. இழந்த சக்தியினை மீண்டும் பெற்றிட பரமாத்மாவை நினைவு செய்திடவேண்டும். பரமாத்மாவை நினைவு செய்திட முதலில் தன்னை உணரவேண்டும். தன்னை ஒளிப்புள்ளியாக உணர்ந்திட ஒளியேற்றி தீபத்தை பார்த்து தியானிக்கவேண்டும். இதுவே தீபாவளியின் நோக்கமாகும். ஆத்மா தன் பயணத்தை ஐந்து விதமாக பயணிக்கின்றது.

1. ஆத்மா பரமாத்மாவுடன் பரந்தாமத்தில் வசித்தல்

2. ஆத்மா பரமாத்மாவிடமிருந்து பிரிந்து பூமியில் தேவர்களாக ஜீவித்தல்

3. ஆத்மா தீய குணங்களைக் கொண்ட அசுரனாகி பரமாத்மாவை தேடுதல்

4. ஆத்மா பரமாத்மாவின் அன்பை பெற்று வைராக்கியத்துடன் வாழ்ந்து காட்டுதல்

5. ஆத்மா பரமாத்மாவிற்கு நிகராகி அவருடன் இணைந்து உலக மாற்றம் செய்தல்

மேலே குறிப்பிட்ட ஆத்ம பயணத்தை பஞ்ச சமஸ்காரம் என்றும் அழைப்பதுண்டு. இது எல்லைக்கப்பார்பட்ட பயணம். இது நிச்சயிக்கப்பட்டது, சுழற்சிக்குட்பட்டது, அனாதியானது. இதுவே சுயதரிசனசக்கரம் அதாவது சுவஸ்திக் என்றும் அழைக்கப்படுகிறது. மனம், புத்தி மூலமாக இச்சக்கரத்தினை சுழற்றும் போது மனம் அபாரமான வலிமையை பெறுகின்றது. புத்தி ஆழமான கூர்மையை பெறுகின்றது. இந்த ஞானத்திற்கு அசுர குணங்களின் தலைகளை அறுத்தெரியும் வல்லமை உண்டு. இப்பயிற்சியினை செய்து ஆத்ம பலம் பெற்றவர்களுக்கு பஞ்சபூதங்களும் சேவை செய்திட காத்து நிற்கும் என்பதே சத்தியம்.?
முருங்கைவிதையின் நன்மைகள், பயன்கள், பலன்கள், மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி பாடலாக காணொளியில் கேட்டு, கண்டு மகிழுங்கள்
முருங்கைவிதை
ஐப்பசி மாதம்
1. உடல் செயல்பாடுகள் :
          சுவாச மண்டலம்
2. இராசி நிலை :
          துலாராசி மண்டலம்
3. காய்கறி : முருங்கைக்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் பி12
5. தத்துவம் : காற்று
6. தோஷம் : வாதம்
7. துருவம் : ஆண்
8. பருவம் : மழை காலம்
9. நேரம் : இரவு 10 முதல் 12 வரை
10. குணம் : பணிவு
11. வைபவம் : தீபாவளி
12. ஞானம் :
          உலக நாடக சக்கரம்

Contact Us
Mail Us
vegetableclinic@gmail.com