தேங்காய்
மார்கழி மாதம்
1. உடல் செயல்பாடுகள் : எலும்பு மண்டலம்
2. இராசி நிலை : தனுசுராசி மண்டலம்
3. காய்கறி : கொப்பரை தேங்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் டி
5. தத்துவம் : நெருப்பு
6. தோஷம் : கபம்
7. துருவம் : ஆண்
8. பருவம் : குளிர் காலம்
9. நேரம் : இரவு 2 முதல் 4 வரை
10. குணம் : நம்பிக்கை
11. வைபவம் : வைகுண்ட ஏகாதசி
12. ஞானம் : ஓர் உலக தர்மம் அரசாங்கம்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். உயர்வான உள்உணர்வு, உயர்வான நோக்கம், உயர்வான சிந்தனை ஆகிய இம்மூன்றும் இருக்கப் பெற்றால் வீடு, சமுதாயம், மற்றும் நாடு என அனைத்தும் உயர்ந்த நிலையில் தான் இருக்கமுடியும். அப்படி இருந்த பூமி சொர்க்கமாகும். அப்படி இல்லாத இன்றைய பூமி நரகமாகும். உயர்ந்த குணத்தை சதோ, தாழ்ந்த குணத்தை தமோ, இரண்டும் கலந்த குணத்தை ரஜோ, என குணங்கள் மூன்று வகைப்படும்.

நற்குணத்தை பெற்றுள்ள தாவரம் நறுமணம் வீசுகின்றது. துர்குணத்தை பெற்றுள்ள தாவரம் துர்நாற்றம் வீசுகின்றது. சூரியனை பார்த்தே தீரவேண்டும் என ஒரு மரம் ஆசைப்பட்டதால் அது உயர்ந்து வளர்ந்தது. சூரியனின் மேல் அம்மரம் காதல் கொண்டு, அதன் சக்தியை தன்னுள் சேமித்து வைத்தது. பின் தான் சேமித்ததை மனிதர்களுக்கு வரமாக தந்தது. வரம் கொடுத்தமரம், தென்னைமரம். வரமாக கொடுக்கப்பட்டது தேங்காய். தேங்காயானது கருவில் உண்டாகும் சிசுவிற்கு தந்தையாக இருந்து கர்பப்பையை பாதுகாக்கின்றது. தேங்காயானது, பெற்ற குழந்தைக்கு தாயாக இருந்து தேங்காய் பாலை தாய் பாலாக கொடுக்கின்றது. அதனால் தான் பாரதத்தில், தேங்காயை கலசத்தில் வைத்து இறைவனுக்கு சமமாக பூஜை மற்றும் வழிபாடு செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட தாயை துரோகி என ஒரு மருத்துவம் அழைத்துக் கொண்டிருக்கின்றது. யார் துரோகி என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

பச்சை தேங்காயை விட முற்றிய கொப்பரைக்தேங்காய் தான் சிறந்த ஊட்டச்சத்து மற்றும் தாதுச்சத்தை பெற்றுள்ளது. உலகிலேயே நார்ச்சத்து கொண்ட ஒரே கொழுப்பு உணவு தேங்காய். கைக்குழந்தைக்கு ஏற்ற ஒரே உணவு தேங்காய்பால். விட்டமின் டி ஊட்டச்சத்தை மறைமுகமாக பெற்றிருக்கும் ஒரேகாய் தேங்காய். மூன்றுகண் கொண்டகாய் தேங்காய். மண்டை ஓட்டில் நுண்ணிய ஓட்டையில்லாமல் காத்திடும் தேங்காய். வம்பில்லா எலும்பை பெற்றிடதேங்காய். சைனஸ் பிரச்சினையிலிருந்து சைரன் வண்டி போல் காத்திடும் தேங்காய். உடல்வலிக்கு உடன் வழிகாட்டிடும் தேங்காய். மந்தமான காதை மந்திரம் போல் மாற்றிடும் தேங்காய். கண்ணில் நீர் ஒழுகுவதை ஓர் அணைகட்டி நிறுத்திவிடும் தேங்காய். பற்கள் என்னும் சொத்தை, சொத்தையாகாது காத்திடும் தேங்காய். தும்மலுக்கு துஷ்டனாக மாறிவிடும் தேங்காய். நெஞ்சுக்கரிப்பு ஓர் அஞ்சும் விஷயமாக்காது தேங்காய். பௌத்திரத்தின் தந்திரத்தை முறித்துவிடும் தேங்காய். சிறுநீரகத்தை காப்பதில் ஒரு தளபதியாக செயல்படுகிறது தேங்காய். தேங்காய் பிறக்கும் இடத்தில் நாமும் பிறப்பதற்கு புண்ணியம் செய்திருக்கவேண்டும்.

கொழுப்பிலிருந்து எலும்பும் எலும்பிலிருந்து இரத்தமும் உருவாகின்றது. அப்படி இருக்க கொழுப்பு தவறானது என்று ஏன் சொல்லப்படுகிறது? அதாவது ஒவ்வொரு காய்கறி பழம் மற்றும் தானியத்தின் தோல் மற்றும் விதைகளில் கொழுப்புசத்து உள்ளது. அதனை அப்படியே உணவாக சாப்பிட்டால் முற்றிலும் பாதுகாப்பானது. அதிலுள்ள எண்ணெயை பிரித்து எடுத்து மருந்தாக பயன்படுத்தலாம். ஆனால் உணவாக பயன்படுத்தக்கூடாது. முக்கியமாக எண்ணெயை சமைத்தால் கெடுதலை மட்டுமே கொடுக்கும். இதில் எள்ளவும் சந்தேகமே இல்லை.

கடலில் கொட்ட வேண்டிய பேராபின் ஆயிலை அனைவரின் வயிற்றில் கொட்டி காசாக்குகிறது எண்ணெய் அரசியல். பல அறிவாளிகள் சேர்ந்து அதற்கு ரீபைண்டு ஆயில் என அறிவியல் ரீதியாக ஒரு பெயரினை சூட்டி உண்மையை மூடி மறைத்துவிட்டனர். ரீபைண்டு ஆயில் மற்றும் மிளகாயை பயன்படுத்தினால் கணையம் செயழிலக்கும். சர்க்கரைநோய் மற்றும் எலும்புறுக்கி நோய் நிச்சயம் வரும். இந்நோய்கள் வந்தால் கால் கட்டைவிரல் அழுகிப்போகும். இப்படி பல மனிதர்களின் எலும்பை உருக்கி இறுதியில் பிணமாக்கி இதனால் வரும் லாபத்தை சில மனிதர்கள் அனுபவிக்கின்றனர். ரீபைண்டு ஆயில் என பெயர் வைத்த அறிவாளிகளுக்கு நம் சார்பில் அவர்களுக்கு ஒரு பெயர் வைத்திடலாம். இவர்களே உண்மையான பிணம் தின்னும் கழுகுகள்.

வைகுண்ட ஏகாதசி

நம்பிக்கையில் இருவகைகள் உண்டு. அழிவற்றதன் மீது நம்பிக்கை, இது உள்முக நம்பிக்கையாகும். அழியக்கூடியதன் மீது நம்பிக்கை, இது வெளிமுக நம்பிக்யைாகும். மூடநம்பிக்கை, அவநம்பிக்கை, மதநம்பிக்கை, தனிமனிதன் மீது நம்பிக்கை, அனைத்தும் இறைவனால் முடியும் என்னும் நம்பிக்கை, கலப்படம் நிறைந்த தர்மசாஸ்திரங்களை கண்மூடித்தனமாக நம்புவது, அறிவியல் எல்லா உண்மையையும் சொல்லி விடும் என நம்புவது, அரசாங்கத்தையே முழுமையாக நம்புவது, பிறரை திருத்தவே முடியாது என நம்புவது, தன்னை தான் மாற்றிக்கொள்ள முடியாது என நம்புவது, இவை அனைத்தும் வெளிமுக நம்பிக்கைகளாகும்.

கண்களால் காணும் அனைத்தும் மாற்றத்திற்குட்பட்டது அல்லது அழியக்கூடிது. உள் உணர்வுகள் மற்றும் சிந்தனைகள் ஆகிய இரண்டும் அழிவற்றது. அழிவற்ற சூட்சம சக்திகளை கொண்டு முழு உலகையே சொர்க்கமாக, வைகுண்டமாக மாற்றிடலாம். பிரஜா பிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயமானது இதனையே வழியுறுத்துகின்றது. தன்னை ஓர் அழிவற்ற ஆன்மா என்று உணருவதே குற்றமற்ற நம்பிக்கையாகும். நம்பிக்கையில் நான்கு வகைகள் உண்டு.

1. தன் மீது நம்பிக்கை வைத்தால் சாதனைகளை படைத்திடலாம்

2. பிறர் மீது நம்பிக்கை வைத்தால் சமூகத்தை மாற்றிடலாம்

3. இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் சோதனைகளை கடந்திடலாம்

4. காலத்தின் மீது நம்பிக்கை வைத்தால் என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்கலாம்

இந்நான்கு நம்பிக்கைகளும் நான்கு தூண்களாகும். மனித சமுதாயம் என்பது இந்நான்கு அறந்தாங்கிகளின் ஆதாரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு தர்மம், ஒரு இராஜ்யம், ஒரு இனம் மற்றும் ஒரு மொழி என வேற்றுமையே இல்லாத சமூகத்தை பூமியில் உருவாக்க முடியும். ஒற்றுமையினால் விளையும் பலன் என்பது, ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சி ஆகிய இம்மூன்றும் முழுமையாக அனைவருக்கும் என்றென்றும் குறையாது நிரம்பப் பெற்றிருக்கும். அப்படிப்பட்ட உலகத்தையே சொர்க்கம், வைகுண்டம், ஹெவன், பேரடைஸ், அல்லாவின் பூந்தோட்டம் என்றழைக்கின்றோம்.

சத்தியத்தின் ஆதாரத்தில் யார் ஒருவர் ஒன்றுபட்டு வாழ விரும்பிகிறார்களோ அவர்களுக்காக சொர்க்கத்தின் வாசல் திறந்திருக்கும். அவ்வாறல்லாதவர்களுக்கு நரகத்தின் வாசல் திறந்திருக்கும். பாதையை தேர்ந்தெடுப்பது அவரவர் விருப்பத்திற்குட்பட்டது.
தேங்காயின் நன்மைகள், பயன்கள், பலன்கள், மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி பாடலாக காணொளியில் கேட்டு, கண்டு மகிழுங்கள்
தேங்காய்
மார்கழி மாதம்
1. உடல் செயல்பாடுகள் : எலும்பு மண்டலம்
2. இராசி நிலை : தனுசுராசி மண்டலம்
3. காய்கறி : கொப்பரை தேங்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் டி
5. தத்துவம் : நெருப்பு
6. தோஷம் : கபம்
7. துருவம் : ஆண்
8. பருவம் : குளிர் காலம்
9. நேரம் : இரவு 2 முதல் 4 வரை
10. குணம் : நம்பிக்கை
11. வைபவம் : வைகுண்ட ஏகாதசி
12. ஞானம் : ஓர் உலக தர்மம் அரசாங்கம்
Contact Us
Mail Us
vegetableclinic@gmail.com