கொத்தவரங்காய்
ஆனி மாதம்
1. உடல் செயல்பாடுகள் :
          நரம்பு மண்டலம்
2. இராசி நிலை : மிதுனராசி மண்டலம்
3. காய்கறி : கொத்தவரங்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் கே
5. தத்துவம் : காற்று
6. தோஷம் : கபம்
7. துருவம் : ஆண்
8. பருவம் : காற்று காலம்
9. நேரம் : பிற்பகல் 2 முதல் 4 வரை
10. குணம் : எளிமை
11. வைபவம் : ஆனி திருமஞ்சனம்
12. ஞானம் : 
          ஆன்மாஅழிவற்றது, 
          உடல் அழியக்கூடியது

தேவர்களுக்கு அமிர்தம் உண்டு மனிதர்களுக்கு கொத்தவரங்காய் உண்டு. இப்பூமியிலேயே பாதுகாப்பான நார்சத்து கொண்ட புரதம் கொத்தவரங்காய். அதனை விளைவிக்கும் திறன் கொண்ட புண்ணிய பூமி நம் பாரத பூமி. பாரதவாசிகள் கொத்தவரங்காய் என்னும் அமிர்தத்தை ஏற்றுமதி செய்து விட்டு இரசாயன மருந்துகள் என்னும் விஷத்தை இறக்குமதி செய்து வருகின்றனர். இதன் மூலம் மருத்துவ உலகில் தன்னை மிகச் சிறந்த முட்டாள்கள் என பாரதவாசிகள் மீண்டும் நிரூபித்துள்ளனர். அதாவது ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் திறனற்றவர்கள்.
                                                                                                                                                           
 பருவ மாற்றங்களுக்கு தக்கவாறு உடல் வெப்பநிலையை மாற்றியமைக்கும் திறன் காது நரம்பிற்கு உண்டு. அவ்வாறு உடல் வெப்பம் மாறத்தவறும் போது, வருடம் முழுக்க மனிதன் அவதியுற நேரிடும். அதாவது வெயில் காலத்தில் தோல் பிரச்சினை, காற்று காலத்தில் செரிமான பிரச்சினை, மழைகாலத்தில் சளிபிரச்சினை மற்றும் குளிர்காலத்தில் மூச்சுத்திணறல் என நோயானது விடுவதில்லை. இது போக தலை முதல் பாதம் வரை காரணமின்றி எந்த நேரத்திலும் வலிகள் வரலாம். அச்சமயத்தில் புத்திசாலித்தனமாக வலி மாத்திரைகளை மிட்டாய் போல் பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு கம்பெனி சார்பாக பக்கவாதம் பரிசாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தனது எந்த வலியினையும் அறியாது எந்த வேலையும் செய்ய முடியாமல் நிம்மதியாக தூங்கலாம். இத்தனை இன்னல்கள் மற்றும் சிக்கல்களிலிருந்தும் நம்மை விடுவிக்கும் கதாநாயகன் கொத்தவரங்காய். வெறும் கொத்தவரங்காயை மட்டுமே விவசாயம் செய்து இந்தியா நிச்சயம் வல்லரசாக முடியும். இதற்கு சான்று இராஜஸ்தான் மாநிலமாகும்.
                                                                                                                                                                  
நார்சத்து இல்லாத உணவு பொருட்கள் உடலை விட்டு முழுவதுமாக நீங்காது குடலில் ஒட்டிக்கொள்கிறது. நாட்பட்ட நிலையில் அது குடலில் கேன்சர் கட்டிகளாகவும் மாறிவிடுகிறது. இந்நிலை மேற்கத்திய நாடுகளில் சகஜமாக அனைவரிடத்திலும் காணலாம். காரணம் அசைவ உணவில் நார்சத்து முற்றிலும் இல்லை. சைவ உணவில் முக்கியமாக காய்கறிகளில் அதிக நார்சத்து உண்டு. காய்கறிகளிலும் அதிக நார்சத்து கொண்டது கொத்தவரங்காய். இப்படிப்பட்ட காயினை காசியில் விட்டு விடுவது பாரதவாசிகளின் கௌரவத்தில் ஒன்றாகும்.
                                                                                                                                                                  
சூட்டின் காரணமாக வரும் அம்மை நோயினை கொத்தவரங்காயானது மூன்றே நாளில் சூட்டோடு சூட்டாக வெளியேற்றி விடும். சர்க்கரை நோய் காரணமாக ஏற்படும் கண் நரம்பு தளர்ச்சியை காணாமல் செய்திடும் கொத்தவரங்காய். ஜன்னியை மீண்டும் கொத்தவரங்காய் ஜெனிக்கவிடாது. குளிரால் உறைந்த வெண்ணிற சளியை சலமாக மிக சுலபமாக கரைத்திடும் கொத்தவரங்காய். இரத்த கட்டை இலகுவாக்கிட கொத்தவரங்காய். இறுக்கமான நரம்பினை தளர்த்திட, மேலும் தளர்ந்த நரம்பு இறுக்கம் பெற கொத்தவரங்காய். மந்தமான கல்லீரல், மண்ணீரல் மற்றும் நுரையீரலை சுறுசுறுப்பாக்கிட கொத்தவரங்காய். சளி, காய்ச்சல், வயிறு உப்புசம், வாய்வு பிடிப்பு மற்றும் வலி வேதனைகள் என்னும் பஞ்சரோகங்களை, வீட்டை விட்டும், நாட்டை விட்டும் வெளியேற்றிட கொத்தவரங்காய்.
                                                                                                                                                                  
4 கொத்தவரங்காயை பச்சையாக அப்படியே மென்று நீராக்கி உமிழ்நீருடன் கலந்து பருகலாம். சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தேங்காய் துருவலுடன் சேர்த்து சாப்பிடலாம். மிக்சியில் அரைத்து வடித்து பருகலாம். ஜீசர் மிக்சியில் அரைத்து எடுத்த கொத்தவரங்காய் மற்றும் தக்காளி சாற்றை சம அளவு கலந்து பருகலாம். அதே போல் கொத்தவரங்காய் மற்றும் கரும்பு சாற்றை சம அளவு கலந்து அருந்தலாம். பொதுவாக கொத்தவரங்காயை சமைத்தால் அதன் மருத்துவ குணங்கள் மாறுபட வாய்ப்புகள் நிறைய உண்டு.
                                                                                                                                                                  
கொத்து கொத்தாக கிடைக்கும் கொத்தவரங்காயின் அற்புத மருத்துவ குணங்களை கொத்தமல்லி நறுமணம் போல் எட்டுத்திக்கும் பரவச் செய்திடுவோம். இதுவே நாம் நம் படைப்பவர் மற்றும் அவரின் படைப்புக்கு செலுத்தும் நன்றிக் கடனாகும்.
                                                                                                                                                                  
ஆனி திருமஞ்சனம்
                                                                                                                                                                  
மனிதன் என்றும் யதார்த்தத்தின் அடிப்படையில் சிந்தித்து செயல்பட வேண்டும், அவ்வாறு அல்லாதவர்கள் பலவிதமான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். யதார்த்தம் இல்லாத கற்பனையான வாழ்கையில் வாழமுற்படுதல். நிவாரணங்களை கருத்தில் கொண்டு செயல்படாது காரணங்களை முன்னிறுத்துதல். விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயத்தை மிகவும் தீவிரமாகவும் கொந்தளிப்புடனும் ஏற்றுக்கொள்ளுதல். சங்கடமான சூழ்நிலைகளையும் நகைச்சுவையாக மாற்றத்தெரியாது, அதனை அப்படியே கருத்தில் கொள்ளுதல். பல்வேறு கோணங்களை கருத்தில் கொள்ளாது ஒரேகோணத்தில் சிந்தித்து முடிவெடுத்து அவதிப்படுதல். புதுமைகளுக்கு பல காரணங்களை காட்டி புறக்கணித்தல். எதையும் மிக தாமதமாக ஏற்றுக்கொள்ளும் தன்மை. இடம், பொருள், ஏவல் அறியாது பொருத்தமின்றி செயல்படுதல். பிரச்சினைகளுக்கு தீர்வு பற்றிய பார்வையின்றி சூழ்நிலைக் கைதியாகுதல். மனிதர்களையும், பொருட்களையும், கருத்துக்களையும் பொருத்தமின்றி பிரயோகித்தல் அல்லது உபயோகித்தல். கற்பனையை செயல் திட்டமாக்கி செய்து காட்டுவதில் உள்ள தடுமாற்றம். விவேகம் தடுமாறும் அளவு சில சமயம் வேகமாக செயல்படுதல். அபிப்பிராயங்களை உண்மையாக்க முயற்சித்தல். இவ்வாறாக தெளிவற்ற மனோநிலையானது உடல் செயல்பாடுகளை முடமாக்கிவிடுகிறது. இத்துனை குழப்பத்திற்கும் காரணம் பகுத்தறிவின் தடுமாற்றமே. பகுத்தறிவை வளர்ப்பதற்காக உருவாக்கபட்ட வைபம் தான் ஆனி திருமஞ்சனமாகும்.
                                                                                                                                                                  இதனையே பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தில் முதல் பாடமாக கற்றுத்தரப்படுகிறது. அழிவற்றது மற்றும் அழியக்கூடியது ஆகிய இரண்டின் வேறுபாட்டை அறிந்து, தெரிந்து, புரிந்து, உணர்வதே முதல் பாடமாகும். அதாவது ஆன்மா அழிவற்றது அது வசித்துக் கொண்டிருக்கும் உடல் அழியக்கூடியது. இதுவே ஓங்காரமாகும்.
                                                                                                                                                                  
1. உடல் என்பது ஆன்மாவின் வீடாகும், ஆடையாகும், கருவியாகும்

2. ஆன்மா புள்ளி வடிவமானது, தனித்துவமானது, நடிக்கக்கூடியது

3. ஆன்மா உணர்வு, அறிவு மற்றும் குணங்களைப் பெற்றது

4. ஆன்மா அனாதியானது, எல்லைக்கப்பார்பட்டது, ஆன்மா உலகில் வசிப்பது
                                                                                                                                                                  இந்நான்கு கருத்தினை மனதில் நிலை நிறுத்துவதினால் உலகின் ஒட்டு மொத்த குழப்பங்களுக்கும் எளிமையானதொரு தீர்வு பிறக்கும். இதுவே உண்மையான பகுத்தறிவாகும். ஆத்ம ஞானம் பெற்று அஞ்ஞான இருள் நீக்குவோம்.?

கொத்தவரங்காயின் நன்மைகள், பயன்கள், பலன்கள், மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி பாடலாக காணொளியில் கேட்டு, கண்டு மகிழுங்கள்
கொத்தவரங்காய்
ஆனி மாதம்
1. உடல் செயல்பாடுகள் :
          நரம்பு மண்டலம்
2. இராசி நிலை : மிதுனராசி மண்டலம்
3. காய்கறி : கொத்தவரங்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் கே
5. தத்துவம் : காற்று
6. தோஷம் : கபம்
7. துருவம் : ஆண்
8. பருவம் : காற்று காலம்
9. நேரம் : பிற்பகல் 2 முதல் 4 வரை
10. குணம் : எளிமை
11. வைபவம் : ஆனி திருமஞ்சனம்
12. ஞானம் :
          ஆன்மாஅழிவற்றது,
          உடல் அழியக்கூடியது
Contact Us
Mail Us
vegetableclinic@gmail.com