கத்திரிக்காய்
வைகாசி மாதம்
1. உடல் செயல்பாடுகள் : 
           சிறுநீரக மண்டலம்
2. இராசி நிலை : ரிஷபராசி மண்டலம்
3. காய்கறி : கத்திரிக்காய் சுரைக்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் பி2
5. தத்துவம் : நிலம்
6. தோஷம் : பித்தம்
7. துருவம் : பெண்
8. பருவம் : காற்று காலம்
9. நேரம் : பகல் 12 முதல் பிற்பகல் 2 வரை
10. குணம் : சகிப்புத் தன்மை
11. வைபவம் : மஹா பிரதோஷம்
12. ஞானம் : திருமூர்த்தி

நீல நிறமான கத்திரிக்காயின் மகிமையானது நீல வண்ண ஆகாயம் போல் பரந்து விரிந்தது. ஆதியும் அந்தமும் இல்லாத சிவனுக்கு உகந்தகாய். பாவத்தை சிவன் பஸ்பமாக்குகிறார். அது போல் நஞ்சினை கத்திரிக்காய் பஸ்பமாக்குகிறது. நீரானது உடலில் 70 சதவிகிதம் பங்கை கொண்டுள்ளது. நீரில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் குடியுரிமை பெறாத கிருமிகளை சிறுநீர் மூலமாக கத்திரிக்காயானது நாடு கடத்துகின்றது. தலை முதல் பாதம் வரை வீக்கம் பெற்று தேங்கியுள்ள நீர் கழிவுகளால் மனிதனுக்கு பல உபாதைகள் உண்டாகின்றது. உதாரணமாக தலைக்கு குளிப்பதால் தலைவலி, பார்வையில் ஒளி கூச்சம், காதுகளில் அழுத்தம், மூக்கில் பச்சைநிறசளி, கசப்பான நாக்கு, நெஞ்சுசளி, அஜீரணம், தோலில் மரு, மங்கு, கால்வீக்கம் இவையாவும் அறிகுறிகளாகும்.
                                                                                                                                                              2 கத்திரிக்காயை 2 தக்காளியுடன் அரைமணி நேரம் வெந்நீரில் ஊரவைத்து பின் அரைத்து வடித்து பருகினால் கரப்பான் ஏற்படாது அதாவது அரிப்பு வராது. சமைப்பதால் அரிக்க வாய்ப்பு உண்டு. அதாவது இரத்தத்தை சுத்தம் செய்யும் பணியானது கத்திரிக்காய் மூலம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் இரத்தத்தில் நஞ்சு உள்ளவர்களுக்கு மட்டுமே அவ்வாறு அரிப்பு உண்டாகும். குற்றம் கத்திரிக்காயில் இல்லை, நம் உடலில் உள்ளது. அதற்கு ஒரு தீர்வு உண்டு. அப்படிப்பட்டவர்கள் 100 கிராம் பீர்க்கங்காயையும், 100 கிராம் சுரைக்காயையும் தோல், விதையுடன் ஒரு வாரம் சாப்பிட்டு வரவேண்டும். அதன் பின் கத்திரிக்காயை உண்டால் அரிப்பு வராது. கத்திரிக்காயில் உள்ள அதன் விதை தான் மிக முக்கியமானது. விதையில்லாத பெரிய அளவில் விற்கப்படும் கத்திரிக்காய் உண்பதால் எந்த நன்மையும் யாருக்கும் உண்டாகாது.
                                                                                                                                                              எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற கேள்விக்கு சரியான பதில் கத்திரிக்காய். சுவையூட்டுவதற்கும், நிறமூட்டுவதற்கும், நீண்ட நாள் கெடாமல் பதப்படுத்துவதற்காகவும் உணவில் சேர்க்கப்படும் இரசாயண பேராபத்திலிருந்து நம்மை காக்கும் காவல் தெய்வம், கத்திரிக்காய். பாதுகாப்பில்லாத குடிநீர் மற்றும் மாசு நிறைந்த காற்றின் நஞ்சை சுட்டெரிக்க, கத்திரிக்காய். சிறுநீரகத்திற்கு தோள் கொடுக்கும் உற்ற தோழன் கத்திரிக்காய்.
                                                                                                                                                              ஒவ்வொரு காய்கறி, பழம் மற்றும் தானியமானது ஆறு விதமான சுவையை தன்னகத்தே இயற்கையாகவே பெற்றுள்ளது. ஆறு சுவையும் உப்பின் ஆறு வடிவங்களாகும். மனிதனுடைய நாக்கு, அந்த மென்மையான சுவையை அறியக் கூடிய பக்குவத்தை முற்றிலுமாக இழந்துவிட்டது. உண்போரை மகிழ்விப்பதற்காக நம் வீட்டில் சேர்க்கப்படும் உப்பு, புளி மற்றும் மிளகாய் காரமே இதற்கு காரணம். இச்சுவைகளானது நம் நாக்கில் தற்காலிகமாக ஒரு கிளர்ச்சியை உண்டாக்கி பின் இறுதியாக நாக்கின் சுவை நரம்புகளை தளர்ந்திடச் செய்கின்றது. பின் அடுத்த முறை அதனை விட அதிக சுவையை மட்டும் உணரும் நிலைக்கு நாக்கு தள்ளப்படுகிறது. அதனால் சுவையை அதிகப்படுத்துவது கட்டாயமாகின்றது. சுவையை கூட்டகூட்ட சிறுநீரகம் தன் வலுவிலக்கின்றது. பழக்கமானது இறுதியில் நம்மை அடிமையாக்குகின்றது. இது போதாது என வாடிக்கையாளரை தக்க வைப்பதற்கும், வர்த்தகத்தை பெருக்கிடவும் செயற்கையான சுவையூட்டும் பல வேதியல் பொருட்களை உணவு தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது. உணவகம் மற்றும் உணவு தொழிற் சாலைகளில் உணவை மட்டும் அவர்கள் தயாரிப்பதில்லை, அதன் மூலம் நோயாளிளை உற்பத்தி செய்யும் பணியை செவ்வனே செய்து வருகின்றனர். இது அனைத்தும் எதார்த்தம் அல்லது சகஜம் என்று பெருந்தன்மையாகவும் கூறுபவர்களும் இந்நாட்டில் உண்டு.
                                                                                                                                                              ஆரோக்கியத்திற்கான தரமான உணவை முன் நிறுத்தி சுவைக்கான உணவை வைராக்கியத்துடன் விலக்கிடவேண்டும் இல்லாவிடில் நம் தலை மாட்டில் விளக்கேற்ற வேண்டிவரும்.
                                                                                                                                                              மஹா பிரதோஷம்
                                                                                                                                                              இரத்தம் நஞ்சாவதற்கு உணவு மட்டும் காரணமல்ல, நம் மனதும் ஒரு வகையில் காரணமாகின்றது. மனிதன் என்றும் பிறர் நலன் பொருட்டு மட்டுமே சிந்தித்து செயல்பட வேண்டும், அவ்வாறு அல்லாதவர்கள் பல விதமான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அதிகப்படியான வெறுப்பு, மனிதர்களை, சூழ்நிலையை, பொறுப்புகளை விருப்பமின்றி ஏற்க வேண்டிய கட்டாயம். விருப்பு, வெறுப்பு மாறிமாறி ஏற்படுத்தும் மன உளைச்சல், குறிப்பிட்ட நபர் அல்லது பொதுவாக பிறருடைய நலன் பொருட்டு சிந்திக்கவும் செயல்படவும் முடியாத நிலை, கோபத்தை பிறர் மீதோ அல்லது தன் மீதோ காட்டியே தீரவேண்டும் என்ற வேகம், மனதின் கட்டுப்பாட்டை தற்காலிகமாக முழுமையாக இழந்து விடுதல், கரடுமுரடான நடவடிக்கைகள், தன்னுடைய பலத்தை பிரயோகிக்க விருப்பம், ஊஞ்சலாடும் உணர்வுகள், சூழ்நிலையிலிருந்து தன்னை விடுவிக்கத் தெரியாது அதனை சுற்றியே எண்ணங்கள், ஆகிய அனைத்தும் சகிப்புத் தன்மையின் வீழ்ச்சியின் அடையாளமாகும். கருணை என்னும் உள் உணர்வினை கொண்டு விருப்பு வெறுப்பின் சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் ஒரு வழிபாட்டு முறையே பிரதோஷமாகும்.
                                                                                                                                                              இம்முறையை பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயமானது ஒரு பயிற்சியாக பயிற்றுவிக்கின்றது. சதா பிறர் நலன் பொருட்டு சுப எண்ணங்களைப் படைத்தல், சுப சிந்தனையால் காத்தல் மற்றும் சுப விருப்பத்தால் தீய சக்திகளை அழித்தல் என மூன்று விதமான பயிற்சிகள் உண்டு. மேலே குறிப்பிட்ட மூன்று சூட்சம விதிகளைக் கொண்டு புதியதோர் உலகத்தையே நம்மால் உருவாக்க முடியும். அவ்வாறான இலட்சியத்தையே இவ்வித்யாலயம் முன் நிறுத்துகிறது.
                                                                                                                                                              ஞானம், யோகம், குணம் மற்றும் சேவை என்னும் நான்கு பாடதிட்டத்தினை நடை முறைப்படுத்துவதின் மூலம் நம் உள் உணர்வுகளானது தூய்மையானதாகவும் சுபமானதாகவும் மாற்றம் பெறுகின்றது. தூய்மையான உள் உணர்வுகளானது பறந்து விரிந்து முழுஉலகிலும் சுகம், சாந்தியினைப் பரவச் செய்கின்றது. இதுவே தர்மத்தை ஸ்தாபிக்கும் முறையாகும். தர்மத்தின் அடிப்படையில் ஒருமித்த கருத்தோடு கர்மத்தை அதாவது காரியங்களை செய்யும் போது அகண்ட இராஜ்யம் உருவாகின்றது. இவ்வாறே உலகில் ஒரு தர்மம் மற்றும் ஒரு இராஜ்யம் என்பது படைக்கப்படுகிறது அல்லது புதுபிக்கப்படுகிறது. இதனையே திருமூர்த்தி பாடமாக இராஜயோக தியானத்தில் கற்றுத் தரப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம் சுகம், சாந்தியை முதலில் சுயத்தில் நிலை பெறச் செய்திடவேண்டும். அதன் பின் வீட்டில், சமுதாயத்தில் பின் இறுதியாக உலகில் பரவச் செய்திடவேண்டும். 

இதுவே உலகில் தர்மத்தை ஸ்தாபனை செய்யும் வழியும் விதியுமாகும்.!
கத்திரிக்காயின் நன்மைகள், பயன்கள், பலன்கள், மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி பாடலாக காணொளியில் கண்டு மகிழுங்கள்
கத்திரிக்காய்

வைகாசி மாதம்

1. உடல் செயல்பாடுகள் : 
          சிறுநீரக மண்டலம்
2. இராசி நிலை : ரிஷபராசி மண்டலம்
3. காய்கறி : கத்திரிக்காய் சுரைக்காய்
4. ஊட்டச்சத்து : விட்டமின் பி2
5. தத்துவம் : நிலம்
6. தோஷம் : பித்தம்
7. துருவம் : பெண்
8. பருவம் : காற்று காலம்
9. நேரம் : பகல் 12 முதல் பிற்பகல் 2 வரை
10. குணம் : சகிப்புத் தன்மை
11. வைபவம் : மஹா பிரதோஷம்
12. ஞானம் : திருமூர்த்தி
Contact Us
Mail Us
vegetableclinic@gmail.com