வெண்பூசணிக்காய் பாடல் வரிகள ்: 
ஆடியோவில் உள்ளதை விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதம் என்றாலும் ஒரு வருடம் என்றாலும் தாங்கும் பூசணி தாங்கும்

ஓரு வார்த்தை கேட்டாலும் ஒரு பார்வை பார்த்தாலும் ஆகும் ஞாபகம் ஆகும்

என்னற்ற மறதிகள் நீர் பூசணி உண்ணுங்கள்       – 2

பசி தாங்க முடியாமல் தலை வலி வரலாம்

பசி தாங்க முடியாமல் இளைப்பு வரலாம்

வாயில் துர்நாற்றம் தான் சளியும் துர்நாற்றம்தான் வியர்வை துர்நாற்றம் தான் நீங்கும் எனலாம்               -2

வறுக்காத  உணவை தான் உண்டிருந்தால் வறுத்தாது உங்களை நோய்கள் என்றும்

காய் தந்த நார்ச்சத்தும்
பழம் தந்த நீர்ச்சத்தும் நோயின்றி நம்மை தான் வாழவைக்கும்

ஒரு மாதம் என்றாலும் ஒரு வருடம் என்றாலும் தாங்கும் பூசணி தாங்கும்

ஓரு வார்த்தை கேட்டாலும் ஒரு பார்வை பார்த்தாலும் ஆகும் ஞாபகம் ஆகும்

வெந்ததை உண்ணாமல் gastric வருமா?

மிளகாயை உண்ணாமல் ulcer  வருமா?

தோல்களும் எரிச்சலாய்
மலமும் தான் எரிச்சலாமய் சிறுநீர்தான் மஞ்சலாய்
இருக்கும் எனலாம் – 2

thyroid ulcer தான் என்றாலும்
cancer ulcer தான் என்றாலும் ஆனந்த கண்ணீரால் அபிஷேகம் நான் செய்வேன் படைப்பினை படைத்தவர்கே

ஒரு மாதம் என்றாலும் ஒரு வருடம் என்றாலும் தாங்கும் பூசணி தாங்கும்

ஓரு வார்த்தை கேட்டாலும் ஒரு பார்வை பார்த்தாலும் ஆகும் ஞாபகம் ஆகும்

என்னற்ற மறதிகள் நீர் பூசணி உண்ணுங்கள்       – 2
வெண்பூசணிக்காய்
சித்திரை மாதம்

1. மண்டலம் : செரிமாணம்
2. இராசி நிலை: மேஷ இராசி்
3. காய்கறி வெண்பூசணி
4. ஊட்டச்சத்து விட்டமின் பி1
5. தத்துவம் நெருப்பு
6. தோஷம் வாதம்
7. துருவம் ஆண்
8. பருவம் வெயில் காலம்
9. குணம் தைரியம்
10. நேரம்  :  முற்பகல் 10 முதல் பகல் 12 வரை
11. வைபவம் :  சத்திய நாராயண பூஜை
12. ஞானம் :  புருஷோத்தம சங்கமயுகம்
                                                                                                                                                                                    நமக்கு சாதாரணமாக கிடைக்கும் ஓர் அசாதாரணமான காய், வெண்பூசணிக்காய். ஒரு மாதம் என்றாலும் ஒரு வருடம் என்றாலும் வெண்பூசணி தன் நிலை குலையாது நீர் சத்தினை தக்க வைத்து தாங்கும் வலிமை பெற்றது. மூளை நரம்புகள் தனது தகவல்களை கடத்துவதற்கு தேவையான உப்புச்சத்தினை அள்ளிக் கொடுத்து ஞாபகமறதிக்கு சவால் விடும் உன்னதமான காய், வெண்பூசணிக்காய். புலன் உணர்வுகளை கடத்துவதில் நரம்புகளுக்கு உப்புசத்து அவசியமாகிறது. அது குறையும் பட்சத்தில் தாமதமாக புரிந்து கொள்ளுதல், தாமதமாக கேட்கும் திறன், தூரப்பார்வை என பல நிலைகளுக்கு மனிதன் ஆளாகின்றான். ஞானிகள், விஞ்ஞானிகள், மெய்ஞானிகள், சித்தர்கள், பிராமணர்கள் என அறிவு சார்ந்த பணியில் ஈடுபடுபர்களுக்கு வெண்பூசணி ஏற்ற உணவாக இருந்ததாக பாரத வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் நடை முறையிலும் உள்ளது.

படைப்பவர், சூரியன் என்னும் அடுப்பை கொண்டு சமைக்கப்பட்ட பொருளில் எள்ளவும் குற்றமில்லை. உதாரணமாக வாய்வு பிடிப்பை நீக்க 4 கொத்தவரங்காயை நன்கு மென்று உமிழ்நீரோடு கலந்து சாப்பிடவேண்டும். பிடிமானங்கள் உடனே விடுபடும். ஆனால் அதே கொத்தவரங்காயை வத்தளாக்கி பொரித்து சாப்பிட்டால், அதுவே வாயுப்பிடிப்பை உண்டாக்கும். குற்றம் படைப்பவரிடமோ அவரது படைப்பிலோ இல்லை, அது மனிதனின் சிந்தனையில் உள்ளது. இந்த குற்றத்தை அறியாமை என்று கௌரவமாக நாம் சொல்லிக் கொள்கிறோம். உயிர்காக்கும் ஊட்டச்சத்துள்ள பொருளை சமையல் என்ற பெயரில் வேகவைப்பது, வனக்குவது, வறுப்பது, சுடுவது, பொறிப்பது என்று உணவை 100 சதவிதம் புளிப்புத் தன்மையாக்கி, அதனை இரத்தத்தின் வாயிலாக உடலில் உள்ள அனைத்து உயிரணுவிலும் புளிப்புத்தன்மையின் அழுத்தத்தை மனிதன் ஏற்படுத்துகிறான். இது உயிரணுவை வாழவிடாது அதனை அழித்து, உடலை சுடுகாடாக்குவதற்கு சமமாகும். இதற்கு சான்று என்னவென்றால், மிருகங்களின் கழிவுகள் துர்நாற்றம் வீசுவதில்லை. ஆனால் மனிதனின் வியர்வை, சிறுநீர், மலம் மற்றும் மூச்சுக்காற்று உட்பட அனைத்தும் துர்நாற்றம் வீசுகின்றன. இதற்கு பரிகாரமாக 100 கிராம் வெண்பூசணியை அதன் தோல் விதையுடன் அரைத்து வடித்து பருகலாம். அதனுடன் நெல்லிக்காய் அல்லது புதினா சேர்த்து அரைக்க கூடுதல் பலன் கிடைக்கும்.
                                                                                                                                                                          புளிப்புத்தன்மை அதிகமாகி அதனை ஈடுகட்ட உடலானது காரத்தன்மை நிறைந்த உணவை கேட்கத் தொடங்கும். அதாவது பசி உணர்வு தூண்டப்படும். அது சமயம் தலைவலி, மூச்சுத்திணறல் ஆகியவை உண்டாகலாம். அதனை சரியாக உணர முடியாது மீண்டும் புளிப்பு பதார்த்தத்தை கொடுத்து, கொடுத்து உடலை முற்றிலுமாக விஷமாகவே மாற்றி விடுகிறோம். அதற்கு கேன்சர் என்று செல்லமாக பெயரிட்டு நம்மால் வளர்க்கப்பட்டும் வருகிறது. தவறான உப்பு, காரம், புளிப்பை வாழ்நாள் முழுக்க சேர்த்து சாப்பிட்டு விட்டு, பின் திடீரென்று குணமாக வைத்தியம் பார்க்கிறான் மனிதன். மனிதன் படைப்பவர் முன் தன் அறியாமையின் உச்சத்தை தொட்டு காட்டி சாதித்துவிட்டான். இவை அனைத்தையும் மாற்றியமைத்திட பச்சை காய்கறிகளை சாப்பிடுவதால் ஞானம் பிறக்கும். ஆனால் ஊர் பேச்சுக்கு பயந்து பச்சையாக சாப்பிட்டால் ஏதோ தீங்கு நடந்து விடும் என்ற கற்பனையில் அதன் மேல் பல தோஷங்களை சுமத்தி, இறுதியில் சத்தியத்திற்கு சமாதி கட்டி மனிதர்கள் கொண்டாடுகின்றனர்.
                                                                                                                                                                                 இப்பொழுது நாம் அறியாமையின் உறக்கத்திலிருந்து விழித்தெழவேண்டும். நோயாளியாவது என்றால் மருத்துவ உலகிற்கு நாம் நல்ல வாடிக்கையாளராவதாகும். மருத்துவ துறையில் பல வேலை வாய்ப்புகள் பெருகிட, பெரிய தொரு வியாபார சந்தை உருவாகி நிலை பெற, நமது நோய் உதவும் என்றால், நம்முடைய தியாகத்திற்கு முன் கடவுளும் நிகரற்றவராவார்.

சத்திய நாராயண பூஜை
                                                                                                                                                                                             உடல் புளிப்புத்தன்மையாவதற்கு உணவு மட்டுமின்றி அதற்கு நமது மனமும் காரணமாகின்றது. மனதில் அதிக பயம் காரணமாக உடல் புளிப்புத்தன்மை அடைகிறது. பயத்தின் முகாந்திரத்தை அறிவதன் மூலம் அதனை வெற்றியடையதற்கான வழி நம் சிந்தனையில் பிறக்கின்றது. மனிதன் சத்தியத்திற்கு மட்டுமே அஞ்சுதல் வேண்டும் அவ்வாறு அஞ்சாதவர்கள் பல விதமானமன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். உதாரணத்திற்கு, தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற பிறர் மீது அதிகாரத்தை பிரயோகித்தல், இயல்பாக நடத்திடாது கட்டுபாடுகளை அதிகமாக விதித்து அதன் மூலம் காரியங்களை செயல்படுத்துதல், பிறருடைய விருப்பத்திற்கு எதிரான மனோநிலை, வாய் சொல் வீரனாக இருப்பதே பாதுகாப்பானது என்று நம்புதல், அதிக அளவு உணர்ச்சிகளை நீண்ட நாளாக அடக்குதல், விருப்பங்கள் செயல் படுத்த முடியாது அதன் மீது தீராத ஏக்கம், சத்தியத்துடன் வாழ்ந்து காட்டுவதை விட சத்தியம் அல்லாத விஷயத்தை எதிர்த்து போராடுவதை பெருமையாக நினைத்தல், எண்ணங்களில் வலிமையை அறியாது பொருளாதார வலிமையே பெரியதாக போற்றுதல், இப்படிபட்ட அசத்தியமான உணர்வுகளானது காலப் போக்கில் பய உணர்வுகளாக மாறி விடுகின்றது. ஒரு மனிதனுடைய அசத்தியமான உணர்வுகளை மாற்றிட அவனுக்கு சத்தியமான உணர்வுகளை கதை வடிவாக மனதில் தூண்ட வேண்டும். பின் அவ்வழிப்படியே அவனையும், இச்சமுதாயத்தையும் துன்பம் இல்லாது வாழ வைக்க வேண்டும். இம்முயற்சியையே சத்திய நாராயண பூஜை என்னும் வைபவமாக நாம் கொண்டாடுகின்றோம்.
                                                                                                                                                                                   இக்கதை பற்றிய தெளிவான விளக்கத்தை பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயமானது பாடமாக கற்பிக்கின்றது. அன்பு, சக்தி, ஞானம், தூய்மை, சுகம், அமைதி, ஆனந்தம் ஆகிய சத்தியமான உணர்வுகளை கொண்டு காமம், கோபம், ஆசை, பற்று, அகங்காரம், அலட்சியம், சோம்பேரித்தனம் என்னும் அசத்தியமான உணர்வுகளை எவ்வாறு இராஜயோக தியானத்தின் மூலம் அழித்திடவேண்டும் என்பதனை அனைவருக்கும் கற்றுத்தருகிறது. உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒரு காரியத்தை செய்வதால் அது உண்மையாகி விடாது. உலகில் யாருமே செய்திடாததால் அக்காரியமானது பொய்யாகிவிடாது. எண்ணிக்கையை கொண்டு ஒரு பொய்யை உண்மையாக மாற்ற முடியாது. இதுவே சத்தியத்தை பற்றிய தெளிவான புரிதலாகும். அவ்வாறு சத்தியத்தை கற்று அதன் வழிப்படி நடந்தால் மனிதனும் தேவனாகலாம். அதாவது நரனிலிருந்து நாராயணனாகலாம். இதுவே சத்திய நாராயண கதையாகும்.
                                                                                                                                                                       இக்கதையின் உந்துதலானது தேவ உலகத்தையே படைத்திடும் வலிமை பெற்றது. அப்படிப்பட்ட சரித்திரக் கதையை அன்றாடம் கேட்கும் போது நம்மால் நிச்சயம் சரித்திரத்தை மாற்றிக் காட்ட முடியும்.
Contact Us
Mail Us
bkarunprakash@gmail.com